First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
பனி உலகத்தில் நமீதா!
-படபடப்பில் ரசிகர்கள்

வழக்கமாக நடிகைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் நட்சத்திர விடுதிகளில் Namithaநடக்கும். “சியர்ஸ்” சொல்லிக்கொண்டே கிளாஸ்களை இடித்துக் கொள்வார்கள். கொழுக் மொழுக் நமீதா விஷயத்தில் இந்த பிறந்த நாள் வேறு மாதிரி கொண்டாடப்பட்டது. சென்னை தீவு திடலில் அமைந்துள்ள ஸ்நோ பால் என்ற பனி உலகத்தில் 50 அநாதை குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவர்.

பாத்ரூமிலிருந்து அப்படியே எழுந்து வந்துவிட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது அவரது காஸ்ட்யூம். கூட்ட நெரிசலில் அதையும் யாராவது இழுத்து தொலைத்தால் என்னாவது என்ற பயம் விரட்ட... நமீதா கேக் வெட்டிய அந்த நிமிடங்கள், வரலாற்றில் பொன்னேடுகளால் பொறிக்கப்பட வேண்டிய நிமிடங்கள்!

அருகில் நின்றிருந்த அநாதை குழந்தைகளுக்கு கேக்கை ஊட்டியவர், மீடியா பக்கம் Namithaதிரும்பி திரளாக நின்றிருந்த புகைப்படக்காரர்களுக்கும் ஊட்டிவிட முயன்றார். ஏதோ இந்த புகைப்படத்தை இன்டர்நேஷனல் புகைப்பட விருதுக்கு அனுப்பி, பரிசுத் தொகையை பவுண்டு கணக்கில் வாங்கிவிடும் நோக்கத்தில் தள்ளுமுள்ளினார்கள் புகைப்படக்காரர்கள். இதில் அவர்கள் ஏறி நின்ற மேஜையே உடைந்து விழுந்தது. ஒரு தொலைக்காட்சி நிருபரின் கேமிரா லென்சும், அவருடைய மூக்கு கண்ணாடியும் ஒரு சேர உடைய, திக்கு மூக்காடி போனார் அவர்.

ஆளாளுக்கு நசுக்கியதில் குளித்தது போல் ஆகிவிட்டார் நமீதா. ஹாய் செல்லம்... மச்சான்ஸ் என்றபடி சுற்றி நின்றவர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவரை, வரலாறு காணாத பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர் போலீசார். வெளியே வந்தால், அத்தனை அநாதை குழந்தைகளும் வெயிலில் காய்ந்தபடி நின்றிருந்தார்கள்.

“நமீதாக்காவை பார்க்க போனா சாப்பாடு கொடுப்பதா சொன்னாங்களே...” ஒரு பிஞ்சின் கேள்வி நாம் வீடு வந்து சேரும் வரை காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter