First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
தாயை விரட்டிய ஹீரோ?
-மனித நேய காவலராக மேக்கப்!

முன்னணி வார இதழ் ஒன்றில் வந்திருக்கிறது அந்த கட்டுரை. தன்னை மனித நேய Seetha-Parthiban Motherகாவலராக காட்டிக் கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் தாயார் கொடுத்திருக்கும் பேட்டி அது. இரண்டு மகன்களாம் இவருக்கு. தந்தையை இழந்த அவர்களை பாடுபட்டு வளர்த்தது இந்த தாய்தான்.

பார்த்திபன், பாபு என்ற இருமகன்களில் பாபு எங்கே போனார் என்பதே தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியாமலிருக்கிற சூழ்நிலையில், மூத்த மகனான பார்த்திபன் தனது அம்மாவை வீட்டிலிருந்து அனுப்பி பல வருடங்கள் ஆகிவிட்டதாம். தான் இன்னார் என்றே சொல்லாமல் எங்கெங்கோ தங்கியிருந்த இந்த தாய், ஒரு கட்டத்தில் அநாதை ஆசிரமத்தில் கூட இருந்திருக்கிறார். “எத்தனையோ பஸ் பிடிச்சு அவனை பார்க்க அவனோட ஆபிசுக்கு போவேன். சார் பிசியா இருக்காரு என்று சொல்லி வாசலிலேயே பேசி அனுப்பிவிடுவார்கள்” என்று கூறியிருக்கிறார் இவர். தனது பேரப்பிள்ளைகளை சந்திக்க அவ்வளவு ஆசை இருக்கிறது இந்த பாட்டிக்கு. அதுவும் நிறைவேறுவதில்லையாம். எதை செஞ்சாலும் வித்தியாசமாக செய்வான் என் பிள்ளை. என் விஷயத்திலும் அப்படி நடந்து கொள்கிறான் போலிருக்கிறது என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பார்த்திபனின் தாயார்.

தற்போது பார்த்திபனிடமிருந்து விலகியிருக்கும் சீதாதான், இவரை தனது செலவில் வாடகை வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார். மாதா மாதம் செலவுக்கு பணம் தருவதும் இந்த முன்னாள் மருமகள்தான். பார்த்திபனுக்கும் சீதாவுக்குமே உறவுகள் உடைந்துவிட்ட நிலையில், முன்னாள் மாமியாரை ஒரு தாய் ஸ்தானத்தில் வைத்து காப்பாற்றும் சீதாவின் பண்பு பாராட்டத்தக்கது.

அதே நேரத்தில் நடமாடும் மனித நேய காவலர் பார்த்திபனின் பண்பையும், அன்பையும் பற்றி ஒரு புத்தகமே போடலாம் போலிருக்கிறது. நியாயமாக அதற்குதான் கிறுக்கல்கள் என்று பெயர் வைக்க முடியும்!

-ஆர்.எஸ்.

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter