சென்னையில் இயங்கி வரும் கோல்டு குவெஸ் ட் என்ற தங்க நகை திட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இது தொடர்பாக சமீபத்தில் எழுந்த புகாரை அடுத்து சேத்துப்பட்டில் உள்ள இந்த அலுவலகத்தை போலீசார் சீல் வைத்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ், மற்றும் ஆந்திர, கர்நாடக திரையுலக நட்சத்திரங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தும், பலரை சேர்த்துவிட்டும் மோசடி செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
நடிகை சினேகா, அவரது அப்பா ராஜாராம், நடிகர் பிரபு, நடிகர் அஜய் ரத்தினம் ஆகியோர் இந்த திட்டத்தில் பலரையும் சேர்த்துள்ளதாக தெரிகிறது. இன்னும் ஒருப்படி மேலே போன அஜய் ரத்தினம், கோல்டு குவெஸ்ட்டின் ஆண்டு விழா மலருக்கு ஒரு கட்டுரையே எழுதி அனுப்பியிருக்கிறார். விரைவில் இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறது காவல் துறை. இது ஒருபக்கம் இருக்க, பெங்களூரிலிருந்து சென்னை வந்திருக்கும் பலர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் இந்த திட்டத்தில் சேர சொல்லி நம்பிக்கையூட்டியதாகவும், அதை நம்பி ஏராளமானவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்ததாகவும் கண்ணீருடன் புலம்பினார்கள் அவர்கள்.
வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி விடலாமா என்று அதிகாரிகள் யோசித்து வரும் இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் முகம் வெளிறிப் போயிருக்கிறார்கள்.
-ஆர்.எஸ்.
|