இந்த படத்திலே வேற ஏதாவது கெட்டப் இருக்கா என்று கேட்டதுதான் தாமதம். அலறி இரண்டு ஸ்டெப் பின்னால் போகிறார் ஜீவா. ஏன் சார், நல்லாயிருக்கறது பிடிக்கலையா? இன்னும் கொஞ்ச நாளைக்கு கெட்டப், அது இதுன்னு ரிஸ்க் எடுக்கறதா இல்லை. கற்றது தமிழ், ராமேஸ்வரம் எல்லாம் நல்ல பேரை வாங்கி கொடுத்துச்சு. இல்லைன்னு சொல்லலை. மரத்தை சுற்றி டுயட் பாடுற வயசுல எதுக்கு பனங்காயை சுமக்கணும்? தெனாவட்டு டப்பிங்கில் இருந்த ஜீவாதான் இப்படி படபடவென்று பொறிந்தார்.
கற்றது தமிழ், ராமேஸ்வரம் இரண்டு படங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இது. என்ன காரணமோ? அப்படியே போட்டுவிட்டார்கள். சரி, அந்த கேப்பில் இரண்டு படங்களை முடிச்சுட்டு வந்திடலாம்னு போயிட்டேன். இந்த படம் துவங்கியதில் இருந்தே எதுவும் சரியா நடக்கலை. முதல் நாள் படப்பிடிப்பில் கேஸ் வெடிச்சு நான் படுத்திருந்த இடத்திலிருந்து சில அடி து£ரத்தில் பெரிய விபத்து. இதென்னடா வம்பா போச்சு என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் படப்பிடிப்பு வந்தால் யாருக்காவது அடிபடும். ஏதாவது விபரீதம் நடந்து கொண்டே இருக்கும். எப்படியோ படத்தை முடிச்சுட்டோம். முழுசா பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு. கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிற ஹீரோ அநியாயத்தை பார்த்து பொங்குற கதையை நிறைய பார்த்திருப்பீங்க. இதுவும் அந்த டைப் படம்தான். ஆனால், திரைக்கதையும், கதை சொல்ற விதமும் வேற மாதிரி இருக்கும் என்றார் ஜீவா.
படத்தின் நாயகி பூனம் பாஜ்வா புனா மாநில அழகி. அங்கே இரண்டு படங்களுக்கு மேல் நடிச்சிருக்காங்க. அதனால் சொல்ற விஷயத்தை கரெக்டா பிடிச்சி நடிச்சிடுவாங்க. இந்த படம் வந்தால் யாருக்கு பேர் கிடைக்குதோ இல்லையோ? அவங்களுக்கு பெரிய பேர் கிடைக்கும். நிறைய படங்களும் கிடைக்கும். ஜீவா சொல்வதை பார்த்தால் அடுத்த படத்திலும் பூனம்தான் ஜோடி போலிருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்
|