கடவுள் என்றாலே சோதிக்கிறவர்தானே! நான் கடவுள் படத்திற்காக கடந்த பல வருடங்களாக கூந்தலும், தாடியுமாக திரிந்த ஆர்யா, தற்போது தனது தாடியையும், தலை முடியையும் நீக்கிவிட்டார். இந்த படத்திற்காக கேமிரா முன் ஆர்யா நின்ற நாட்கள் மட்டும் 200. இதில் ஸ்பாட்டில் இவர் இருந்த போதும் எடுக்காமல் விட்ட நாட்கள் கணக்கில் இல்லை. இவரது போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டதால் தாடியை நீக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம் பாலா. இந்த சம்மர் சந்தோஷத்தை பிரியாணி போட்டு கொண்டாடியிருக்கிறார் ஆர்யா.
நான் கடவுள் படத்திலிருந்து ஆர்யா வர தாமதமானதால், இவரை வைத்து படம் எடுக்கவிருந்த விஷ்ணுவர்த்தன் நேரடியாக பாலாவிடம் பேசி ஆர்யாவை சீக்கிரம் விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து வேகமாக செயல்பட்ட பாலா, சொன்னபடி ஆர்யாவை அனுப்பி வைத்துவிட்டார். விரைவில் இவர் நடிக்கும் சர்வம் வேலைகள் துவங்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக தனது நண்பர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து சந்தோஷப்பட்ட ஆர்யா, முடி எடுத்ததைதான் பிரியாணி போட்டு கொண்டாடியிருக்கிறார்.
சர்வம் படத்தில் ஷாம் மாதிரி (மீசையில்லாமல்) வந்தாலும் கூட ஆர்யாவுக்கு சந்தோஷம்தான் போலிருக்கிறது.
-ஆர்.எஸ்.
|