First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மத்திய அரசுக்கு ஆதரவு வாபசா? 23-ந் தேதி ஆலோசனை நடத்தவிருப்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் பேட்டி - அலுவலகத்துக்கு வெளியேயும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குற்றமே: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாட்டிலேயே முதல் முறையாக மயிலாடுதுறை அருகே ஹீலியம் வாயு ஆலை தொடக்கம்
பிறந்தநாள் கொண்டாட்டம்
-லட்சுமிராயின் கண்ணியம்

இது எத்தனையாவது பிறந்த நாள் என்பது தெரியவில்லை. ஆனால், இந்த Lakshmiraiபிறந்தநாளை பொறுப்போடும், கண்ணியத்தோடும் கொண்டாடினார் லட்சுமிராய். சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் வாணி வித்யாலயாவில் மன வளர்ச்சி குன்றியோர் மையத்தில் அங்குள்ள குழந்தைகள் மத்தியில் கேக் வெட்டி இந்த பிறந்த நாளை கொண்டாடினார் அவர்.

கடந்த வருடம் தனது திரையுலக நண்பர்களை அழைத்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தாராம். அப்போது இல்லாத மன நிறைவு இப்போது இருக்கிறது என்ற லட்சுமிராய் ஒரு வயது ஏறிவிட்டதே என்ற கவலையை தவிர, இந்த பிறந்தநாள் மிகவும் மகிழ்ச்சியானது என்றார்.

விரைவில் வெளிவரப்போகும் தாம் தூம் படத்தை தவிர முத்திரை, மலை, பருந்து ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லட்சுமிராய்.

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter