அரிதாரம் ரொம்ப மோசமானது. அது ஆளையே மாற்றிவிடும். அதனால் அமீர் நடிப்பதை விட்டு விட்டு தனது கவனத்தை இயக்குவதில் காட்டவேண்டும். இப்படி நேரடியாக அமீரை வைத்துக் கொண்டே அட்வைஸ் செய்தார் பாலுமகேந்திரா. டைரக்டர்களில் பலர் நடிகர்கள் ஆகிற காலம் இது. அமீர் நடிக்கும் யோகி படத்திலேயே சமுத்திரக்கனி, நந்தா பெரியசாமி ஆகிய வேறு சில இயக்குனர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது சுள்ளான், திருமலை, ஆதி ஆகிய படங்களை இயக்கிய ரமணாவும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் இவர் வில்லனாக நடிக்கிறாராம். இப்படத்தை இயக்கவிருப்பது எஸ்.ஏ.சந்திரசேகரன். ஆதி படத்திற்கு பிறகு தானே இயக்கி ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார் ரமணா. ஆனால் ஆதி படத்தின் ரிசல்ட் மறுபடியும் அவரை இயக்க விடாமல் துரத்தியடிக்க, அரிதாரம் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர்.
பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிப்பேன் என்று அவ்வப்போது இவர் நண்பர்களிடம் சொல்லி வந்த போதெல்லாம், “அவர் தனது வீட்டை விற்கிற ஐடியாவில் இல்லையே” என்று கிண்டலடித்து வந்த நண்பர்கள் இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
வில்லனாகதானே... விடுங்கப்பா!
-ஆர்.எஸ்.
|