“நாற்பது லட்சம் வாங்கிவிட்டார் என்று எழுதுகிறார்கள். நான் அவ்வளவா வாங்கினேன்?” என்று பச்சரிசி பற்களை நறநறக்கிறார் நயன்தாரா. ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர தூதர் பதவிக்கு அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் நாற்பது லட்சம் என்றும், போட்டி தினத்தன்று அவர் வராததால் மேற்படி தொகையை அவரிடமிருந்து திருப்பி கேட்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் நயன்தாராவுக்கு பேசப்பட்டது நாற்பது என்றாலும், அட்வான்சாக பெற்றது வெறும் ஐந்து லட்சம்தானாம்.
நிலைமை இப்படியிருக்க, உண்மையை திரித்து வேறு மாதிரியாக கதை கட்டுகிறார்கள் என்று கொதித்து போயிருக்கிறார் அவர். இந்த போட்டியிலிருந்து அவர் விலகியதற்கு காரணமும் வேறு மாதிரி சொல்லப்படுகிறது. யாரோ ஒரு முக்கியஸ்தர், நயன்தாராவிடம் வேறு எதையோ எதிர்பார்த்தாகவும், அதற்கு அவர் சம்மதிக்காததால்தான் தந்திரமாக இப்படி காய் நகர்த்தினார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக இந்த இடத்தை பிடிக்க போட்டியிடுகிற இரண்டு நட்சத்திரங்கள் எல்லாவகையான ஒத்துழைப்பும்(?) தருவதாக கூறினார்களாம். ஆனால் “நயன்தாரா இடம் காலியாகவே இருக்கட்டும். வேறு நடிகைகள் யாரையாவது நியமித்தால் நான் தூதராக இருப்பதை பரிசீலிக்க வேண்டி வரும்” என்று விஜய் எச்சரிக்க, கப்சிப் ஆகிவிட்டார்களாம்.
-குரு
|