First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாதென ஆஸ்திரேலியா அறிவிப்பு - தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விபத்தில் படுகாயம் - ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைப்பட ஷுட்டிங் அமெரிக்காவில் இன்று ஆரம்பம்: கதாநாயகி ஜஸ்வர்யாராய் - அணுசக்தி ஒப்பந்த இறுதி கையெழுத்திட மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம் - சன் டிவி இன்று முதல் காமெடித்திரை புதிய நகைச்சுவை டிவி சேனல் துவக்கம் - சென்னையில் 6000 பிள்ளையார்கள் கடலில் கரைப்பு - தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் - இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது: அப்துல் கலாம் உறுதி - ஒலிம்பிக் நாயகன் அபிநவ் பிந்தரேவுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
விஜய்-த்ரிஷா நட்பு டமால்!
பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைப்பு இல்லை?

தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு, படீரென்று Trishaஅறுந்து விட்டதாம். பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே 'அட போங்கப்பா' என்று அலுத்துப் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் 'த்ரிஷா வேண்டாம்' என்றார் விஜய். ஆனாலும், கொல்லைபுற வழியாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தார் த்ரிஷா! நயன்தாராவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த போதும், அதை ஓவர்டேக் செய்தார்.

வேண்டா வெறுப்பாக ஜோடி சேர்ந்தார் விஜய், மறுபடியும்! ஆனாலும், அவர் நினைத்ததுதான் நடந்தது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை தரவில்லை. மன்றக் கொடி அறிமுக விழாவில், தரணியை கில்லி பட இயக்குனர் என்றுதான் மேடைக்கு அழைத்தார்கள். பேசிய அனைவருமே வலுக்கட்டாயமாக குருவி பெயரை உச்சரிக்க மறந்தார்கள். இப்படி ஜோடி சென்ட்டிமென்ட்டில் வாடிப் போன விஜய் செய்த முதல் காரியம், த்ரிஷாவுடனான நட்பை துண்டித்துக் கொண்டதுதான்.

கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய். கடைசி வரை தன்னை அழைப்பார் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கண்ணீரும் கம்பலையுமாக அம்மாவிடம் அழுது வைக்க, விஜய் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயன்றாராம் அம்மா. இப்படியெல்லாம் நடக்கும் என்றே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த விஜய், பிறந்த நாளை கலகலப்பாக கொண்டாடினார். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!

-வம்புராசா

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter