யுவன்சங்கர் ராஜா பிரச்சனை இப்போதுதான் ஓய்ந்தது. அதற்குள் இன்னொரு இசையமைப்பாளர் குடும்பத்தில் விரிசலாம். பாடுவதற்கு வாய்ப்பு கேட்டு வந்த பருவக்குயில் ஒன்று இசையமைப்பாளரின் ஆர்மோனிய பெட்டிக்குள் இடம் பிடித்துவிட்டதாம். அன்றிலிருந்து வீட்டுக்கே போவதில்லையாம் இசையமைப்பாளர்.
சுமார் இரண்டு மாதங்கள் இப்படியே நகர, வெறுத்துப்போன மனைவி கடுங்கோபத்தில் கணவரோடு சண்டை போட்டாராம். இசைக்கூடத்தையே வசைக்கூடமாக்கிய மனைவி, கொஞ்சம் எமோஷனல் ஆகி வேறு முடிவை எடுத்துவிட்டாராம்.
அதிர்ந்து போன இசையமைப்பாளர் கட்டிய மனைவியையும் விட முடியாமல், காதலியையும் விட முடியாமல் தவிக்கிறாராம். கொடுமை என்னவென்றால், முடியாமல் கிடந்த மனைவியை பார்க்க கூட மருத்துவமனைக்கு போகவில்லை என்கிறார்கள். ட்யூனுக்காக மன்மத ராசாவை அழைக்கலாம். மன்மத ராசாவாகவே இருக்க நினைத்தால் எப்படி? என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!
-ராக தேவன்
|