ஏற்கனவே ஓடிய ஏ.சி இன்னும் ஜில்லானது. காரணம், சோனா அங்கு வந்ததுதான். இவர் நடித்த 'பத்து பத்து' இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இதையட்டி பத்திரிகையாளர்களை சந்திக்க வந்திருந்தார் சோனா. குனிந்தால் கும்... எழுந்தால் ஜம் என்று அவர் வந்திருந்த கோலமே எக்குதப்பாக இருந்தது.
பத்து பத்து படத்திலே இவ்வளவு கவர்ச்சி காட்டியிருந்தீங்களே, உங்க வீட்டிலே பார்த்திட்டு என்ன சொன்னாங்க? இது முதல் கேள்வி. 'நாங்க ரொம்ப ஆர்த்தடக்ஸ் பேமிலி! (ஐயோடா!) முதன் முதலில் நான் கவர்ச்சியாக நடிக்கறதை பார்த்திட்டு எங்கம்மா பயங்கர அதிர்ச்சியாயிட்டாங்க. அப்புறம் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. நீங்க சொல்ற மாதிரி பத்து பத்திலே கதைக்கு அவ்வளவு கவர்ச்சி தேவைப்பட்டுச்சு. அதனால நடிச்சேன். செக்ஸ் உணர்வு அதிகமுள்ள மனைவியா நானும், அதில் அதிக ஆர்வம் இல்லாதவரா தலைவாசல் விஜயும் நடிச்சிருந்தோம். எங்க வீட்டிலே வந்து தங்கியிருக்கும் உறவுக்கார டீன் ஏஜ் பையனுக்கும் எனக்கும் கள்ளக்காதல் வர்ற மாதிரி கதை. எப்படி கவர்ச்சி காட்டாமல் இருக்க முடியும்?'
சரி, கதையை விடுங்க. உங்களுக்கும் அந்த படத்தில் வர்ற மாதிரி புருஷன் அமைஞ்சா என்ன பண்ணுவீங்க? 'வாழ்க்கையே வெறுத்திடும். ஆனாலும் கள்ளக்காதல் அளவுக்கு போவேனா தெரியவில்லை' என்றார் சோனா.
சினிமாவில் உங்களுடைய குளோஸ் பிரண்ட் யார் என்றால் பளிச்சென்று பதில் சொல்கிறார். 'ஆர்யா!' ஏதாவது பிரச்சனை என்றால் இவர்தான் முதலில் வந்து நிற்பாராம். என்றாலும், விஜயுடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்பதுதான் சோனாவின் விருப்பமாக இருக்கிறது. 'அதற்கு அவரு ஒத்துக்கணுமே' என்கிறார் சந்தேகத்துடனும், ஆர்வத்துடனும்!
-ஆர்.எஸ்.அந்தணன் |