First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாதென ஆஸ்திரேலியா அறிவிப்பு - தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விபத்தில் படுகாயம் - ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைப்பட ஷுட்டிங் அமெரிக்காவில் இன்று ஆரம்பம்: கதாநாயகி ஜஸ்வர்யாராய் - அணுசக்தி ஒப்பந்த இறுதி கையெழுத்திட மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம் - சன் டிவி இன்று முதல் காமெடித்திரை புதிய நகைச்சுவை டிவி சேனல் துவக்கம் - சென்னையில் 6000 பிள்ளையார்கள் கடலில் கரைப்பு - தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் - இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது: அப்துல் கலாம் உறுதி - ஒலிம்பிக் நாயகன் அபிநவ் பிந்தரேவுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
சேரன் மீது ப்ரியாமணி பாய்ச்சல்!
-பேட்டிக்கு பேட்டி பதில்!

கொஞ்சம் வெளிப்படையாக பேசி, வாங்கிக் கட்டிக் கொள்வது சேரனின் பாலிசி. Priyamaniகடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், நான் இயக்கும் பொக்கிஷம் படத்தில் நடிக்க பிரியாமணியின் கால்ஷீட் கேட்டேன். இரண்டு நாட்களில் பதில் சொல்வதாக சொன்னார். அதன்பின் எந்த தொடர்பும் இல்லை. ப்ரியாமணிக்கு அவருடைய தகுதிக்கு மேல் புகழ் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இந்த ஆட்டம் என்று குமுறியிருந்தார்.

சினிமாக்காரர்கள் சத்தமில்லாமல் இருமினாலே சந்து பொந்தெல்லாம் கேட்கும். சேரன் கொடுத்தது எக்ஸ்க்ளுசிவ் பேட்டியல்லவா? சீக்கிரமே ப்ரியாமணியின் பார்வைக்கு போய்விட்டது. அவ்வளவுதான்! ஒரு ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார்.

சேரன் என்னிடம் கால்ஷீட் கேட்டார் என்பதே தவறு. அவருடைய அலுவலகத்தில் இருந்து யாரோ பேசினார்கள். அவர்களிடம் இரண்டு நாட்கள் கழித்து பேசுங்கள் என்றேன். அப்போதும் சேரன் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதனால்தான் நானும் சும்மா இருந்துவிட்டேன். இன்னொரு விஷயம்... மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். எந்த நேரத்தில் அழைத்தாலும் வர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பொக்கிஷத்தில் ஒப்புக் கொண்டால், மணிரத்னம் படத்தில் நடிக்க முடியாதே? அதனால்தான் சேரன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன் என்கிறார் ப்ரியாமணி.

அமீர், சேரன்... அடுத்து எந்த இயக்குனர் ப்ரியாமணியின் கோபத்தை ரசிக்கப் போகிறாரோ?

-ஆர்.எஸ்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter