First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகம் பேரணி: 19 ந் தேதி ராமேஸ்வரத்தில் நடக்கிறது - பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு - புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி? இலங்கை அதிபர் பரிசீலனை - ஆந்திராவில் கலவரம்: ஆறு பேர் உயிருடன் எரிப்பு - இலங்கை தமிழருக்காக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: தேமுதிக புறக்கணிப்பு
இளைய சூப்பர் ஸ்டார்
தனுஷ¨க்கு ரசிகர்கள் பட்டம்

கொஞ்சம் வலிக்கிற மாதிரியான பிளாஷ்பேக். சில வருடங்களுக்கு முன்பு தனது Dhanushபிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களை ஆர்வத்தோடு சந்தித்த தனுஷ், அவர்களின் முரட்டுத்தனமான அன்பின் காரணமாக கை முறிந்து கட்டோடு திரிந்தார். இதன் காரணமாக தனுஷ§க்கு பலத்த செக்யூரிடி போடப்பட்டு அருகில் யாரும் நெருங்காதபடி பார்த்துக் கொண்டார் அவரது அப்பா கஸ்து£ரிராஜா. தெனாலிராமனின் பூனை, பாலை பார்த்தாலே பதறி ஓடிய மாதிரி, அதன் பிறகு ரசிகர்களை சந்திப்பதையே தவிர்த்து வந்த அவர், திரும்பவும் அவர்களோடு தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனாலும், இது அட்வான்ஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்தான். ஏனென்றால் தனது பிறந்த நாளான 28-ந் தேதியன்று ஐதராபாத்தில் இருப்பாராம் தனுஷ். அதனால் முன்னதாகவே சென்னையில் கொண்டாடினார். இந்த முறை கொஞ்சம் அடக்கம் காத்த ரசிகர்கள், வருங்கால முதல்வர் தனுஷ் வாழ்க என்று கோஷம் எழுப்பாத குறை. ஆனாலும், தனது ரசிகர் மன்றம் இனி பொது சேவைகளை வெளிப்படையாக செய்யும் என்று அறிவித்தார் தனுஷ். (இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் நற்பணிகள் செய்து வந்தார்களாம்)

சரி, தனுஷ் சொன்ன பிறந்தநாள் செய்தி என்ன? "தனுஷோட ரசிகன் வெட்டியாக ஊர் சுற்றுபவன் என்ற பெயரை வாங்கிட கூடாது. உருப்படியாக வீட்டு வேலைகளை பார்க்கணும். நேரம் கிடைக்கும்போது கொடி கட்டுங்க, போஸ்டர் ஓட்டுங்க" இதுதான் ரசிகர்களுக்கு அவர் சொன்ன பிறந்த நாள் அட்வைஸ்.

உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் தனுஷ§க்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் வழங்கினார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த தனுஷ், நான் அதுக்கு இன்னும் தகுதியானவனா ஆகலை. அதனால் இந்த பட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். அட, பிராக்டிகலா இருக்காரே!

-நெடுமுடி சோனு

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter