First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாகிஸ்தான் புதிய அதிபராக சர்தாரி தேர்வு - அதிமுகவில் உறுப்பினராக உள்ள நடிகர், நடிகைகளுக்கு விஐபி அடையாள அட்டை - தமிழகத்தில் 15ந் தேதி முதல் அரசு கேபிள் டிவி மூலமாக மலிவு விலையில் தொலைக்காட்சி பார்க்கலாம் - சரவணா ஸ்டோர் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை நீக்க அரசு உத்தரவு - இலங்கை வன்னேரிக்குளம் சண்டையில் விடுதலைப்புலிகள் தாக்கி 50 பேர் பலி: 120 பேர் படுகாயம் அடைந்தனர்
ஜெயம் ராஜாவுக்கு அட்வான்ஸ்
சௌந்தர்யா ரஜினி புது முடிவு

பலரின் 'வெல்கம்' பிரபுவாகிவிட்டார் வெங்கட் பிரபு. ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் Director Rajaஅஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முதலில் இயக்க வேண்டியது வெங்கட்தான். வேறு சில குழப்பங்களால் அது முடியாமல் போய்விட ராஜுசுந்தரம் அந்த இடத்தை பிடித்துவிட்டார். இப்போது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும், வார்னர் பிரதர்சும் இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்க வெங்கட் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அஜீத் நடிக்க வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு முன்பாகவே இந்த படத்தை துவங்க இருக்கிறார்களாம். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கவிருக்கிறார்கள். இயக்குவதற்காக வெங்கட் வாங்கியிருக்கும் சம்பளம் சுமார் இரண்டு கோடி. இது ஒருபுறம் இருக்க, ஜெயம் ராஜாவையும் வார்னர் பிரதர்சுக்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் சௌந்தர்யா. இதுவும் புதுமுகங்கள் நடிக்கிற படம்தான். இவருக்கும் சம்பளம் இரண்டு கோடி என்கிறது கோலிவுட் தகவல்கள்.

முக்கிய செய்தி என்னவென்றால், தமிழில் முதன் முறையாக நேரடி தமிழ் படத்தை இயக்குகிறார் ராஜா. இதுவரை இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் தெலுங்கு ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஆர்.எஸ்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter