First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
காத்திருந்தார் சரத்...
காலை வாரினார் நமீதா

வரவர நமீதாவுக்கு மனசும் சின்னதாகிவிட்டது. முன்பெல்லாம் நமீதா கால்ஷீட் Namithaசொதப்பினார் என்று செய்திகள் வந்ததே இல்லை. முதன் முறையாக அப்படியரு செய்தி. அதுவும் நடிகர் சங்க தலைவரின் படத்திலேயே!

சரத்குமாரின் சொந்தப்படம் 1977. சாதாரணமாக தனது படங்களில் கட்டுடல் காட்டும் சரத், இப்படத்தில் ஹீரோயினும் கட்டுடல் காட்ட வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? நடமாடும் கறிக்கடை நமீதாவை புக் பண்ணிவிட்டார். இவரும் சரத்தும் ஆடும் எரோட்டிக் பாடல் காட்சியில் பாதியை கோவாவில் எடுத்தார்கள். மீதியை ஏ.வி.எம் மில் செட் போட்டு எடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள்.

காலையிலேயே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார் சரத். ஆனால் நேரம் கடந்த பின்பும் நமீதாவைதான் காணவில்லை. திடீரென்று போன் செய்த நமீ, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றாராம். படப்பிடிப்பை மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு சரத் கிளம்பிவிட, மறுநாள் நடந்ததும் இதே கூத்துதான். உடல்நிலை சரியில்லாத நமீதாவுக்கு 'நலம் பெற வாழ்த்துகள்' என்று பொக்கே கொடுத்து அனுப்பினார் சரத். ஆனால் நமீதா வீட்டில் இருந்தால்தானே? எங்கே என்று தேடியவர்களுக்கு அதிர்ச்சி.

பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆட ஒப்புக் கொண்ட நமீதா, அதற்கான ரிகர்சலில் இருந்தாராம். இந்த நிகழ்ச்சியில் ஆடுவதற்காக பெருந்தொகை ஒன்றை அவர் பெற்றிருந்ததால், சரத்துக்கு டிமிக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஊருக்கெ நீதி சொல்லும் நாட்டாமைக்கே இந்த கதி என்றால், பஞ்சாயத்தை எந்த ஆலமரத்துக்கு கீழே கூட்டுவது?

-ஆர்.எஸ்

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter