முன்பெல்லாம் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்கள் பெரிய அரங்குகளில் நடக்கும். காலப்போக்கில் அதை தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக நடத்த ஆரம்பித்தார்கள். ஆனாலும், விழாவாக நடத்துகிற திருப்தி இதில் கிடைப்பதில்லை என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. இதையடுத்து இந்த ஸ்டைலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள துவங்கினார்கள் இயக்குனர்கள்.
ஆனால், இதிலும் கொஞ்சம் அட்வான்ஸ் நிலைக்கு போயிருக்கிறார் மைக் மோகன். தனது சுட்டப்பழம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தனியார் எப்.எம் ரேடியோ ஸ்டேஷனில் நடத்தியிருக்கிறார். 106.4 ஹலோ எப்.எம் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பாக நடத்தியிருக்கிறது. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இப்படி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். கேசட்டை ஷாம் வெளியிட, விமலாராமன் பெற்றுக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் மோகன், தனது சுட்டப்பழம் படத்தை டிஜிட்டல் முறையில் படமாக்கி வந்தார். சென்னையிலும், பிற ஊர்களிலும் டிஜிட்டல் தியேட்டர்கள் குறைவாகவே இருப்பதால், படத்தை பிலிமுக்கு மாற்றி பிரிண்ட் போடும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம். இப்படி செய்யலாமே என்று கடைசி நேரத்தில் முடிவு செய்ததால் இம்மாதம் 18-ந் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருந்த சுட்டப்பழத்தை, 25-ந் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.
-ஆர்.எஸ். |