'அக்கடா' என்று அசந்து படுக்கிற நேரம் 'டொக் டொக்' என்று கதவை தட்டினால் எப்படியிருக்கும்? ஸ்ரேயாவின் நிலைமையும் அப்படிதான் இருக்கிறது. படப்பிடிப்பு முடிஞ்சுது என்று நினைத்துக் கொண்டிருந்தால், பேட்ச் வொர்க் என்று அழைக்கிறார்களாம் கந்தசாமி குழுவினர். 'மெக்சிகோவிலேயே எல்லா படப்பிடிப்பும் முடிஞ்சு போச்சே' என்று சந்தேகம் கேட்ட ஸ்ரேயாவுக்கு கிடைத்த பதில்தான் 'அச்சச்சோ' ரகம்.
எப்போதுமே கோடிகளை கொட்டுவதற்கு அஞ்சாத தயாரிப்பாளர் தாணு, கந்தசாமிக்காக பெட்டி பெட்டியாக பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா பார்த்திராத தேசங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று முடிவு செய்த இயக்குனர் சுசி கணேசன் தான் நினைத்தபடியெல்லாம் படத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் மெக்சிகோ போய்விட்டு திரும்பிய கந்தசாமி டீம், விமானத்தில் அதுவரை எடுத்த பிலிம் பாக்சோடு பயணம் செய்திருக்கிறது. சென்னைக்கு வந்து பார்த்தால் 120 பாக்ஸ்களில் 20 பாக்ஸ் பிலிம் சேதமாகிவிட்டதாம். இது யாரால் வந்த கோளாறு என்பதையெல்லாம் ஒரு பக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் தாணு, எக்காரணத்தை கொண்டும் ரிலீஸ் தாமதமாகிவிடக் கூடாது என்பதால், ரீ ஷ§ட் செய்ய சொல்லிவிட்டாராம்.
சென்னை பின்னி மில்லில் மெக்சிகோவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகதான் மறுபடியும் ஒரு முறை ஸ்ரேயாவின் கால்ஷீட் கேட்கப்பட்டிருக்கிறது. இப்போது புரிகிறதா ஸ்ரேயாவின் சிணுங்கலுக்கு காரணம்?
-ஆர்.எஸ். |