இயக்குனர் சுராஜுக்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஷ§ட்டிங்கில் இருந்து பாதியிலேயே சென்னைக்கு வந்துவிட்டார் வடிவேலு. இது முந்தைய செய்தி. சென்னைக்கு வந்த வடிவேலு, சுராஜின் சமாதானத்தை ஏற்று கொள்ளவில்லையாம். இது லேட்டஸ்ட் செய்தி.
சுராஜ்-வடிவேலு இணைந்து கலக்கிய படம் மருதமலை. இதில் சிரிப்பு போலீசாக வந்து கம்பீர போலீஸ்களையும் கலகலப்பாக்கினார் வடிவேலு. காமெடிக்காகவே 100 நாட்களை தாண்டி ஓடியது இப்படம். இதை தொடர்ந்து இருவரும் இணைந்த படம்தான் படிக்காதவன். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் பிரச்சனை. இயக்குனர் சொன்ன டயலாக்கை வடிவேலு மாற்றிப் பேச, நான் சொன்னபடி பேசுங்க என்று இயக்குனர் சொல்ல, விருட்டென்று கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டார் வடிவேலு.
படத்தின் நாயகன் தனுஷ§ம் இதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு வந்த வடிவேலு செய்த முதல் காரியம், இப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தை ஒரு பைசா பாக்கியில்லாமல் திருப்பி அனுப்பியதுதான். இத்தனை நாட்கள் எடுத்த படப்பிடிப்பு செலவை யார் கொடுப்பது? வடிவேலுவை வைத்து எடுத்த காட்சிகளை எல்லாம் வேறொரு நடிகரை வைத்து திரும்ப எடுக்க வேண்டுமே? இப்படியெல்லாம் கவலைப்பட்டாலும், பிரச்சனையை பெரிது படுத்தாமல் வேறு காமெடியை தேடிக் கொண்டிருக்கிறது படிக்காதவன் யூனிட்.
-வம்புராசா |