First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகம் பேரணி: 19 ந் தேதி ராமேஸ்வரத்தில் நடக்கிறது - பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு - புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாவுக்கு அமைச்சர் பதவி? இலங்கை அதிபர் பரிசீலனை - ஆந்திராவில் கலவரம்: ஆறு பேர் உயிருடன் எரிப்பு - இலங்கை தமிழருக்காக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம்: தேமுதிக புறக்கணிப்பு
கேள்வி கேட்ட மாணவர்
ஓட்டம் பிடித்த மிஷ்கின்!

'பதவி வரும்போது பணிவு வர வேண்டும் தோழா...' எத்தனையோ புத்தகங்கள் படித்து Myshkinஅறிவுச்சுடராக மின்னும் இயக்குனர் மிஷ்கின், மேலே சொன்ன இரண்டு வரிகளை மட்டும் படிக்கவே இல்லை போலும்.

சமீபத்தில் இவரை பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் முக்கிய விருந்தாளியாக அழைத்திருந்தார்கள். மிஷ்கினின் உரையை கேட்க மாணவர்கள் ஆர்வத்தோடு குழுமியிருக்க, நுணல் தன் வாயை திறந்தது. 'இங்கே எதுக்குய்யா உட்கார்ந்திருக்கீங்க? நானெல்லாம் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தா இப்படி முன்னணி இயக்குனர் ஆனேன்? ஏட்டு சுரைக்காய் கறிக்கு ஆகுமா? நாளையிலிருந்து யாரும் இங்கே வராதீங்க. போய் தேடுங்க. கஷ்டப்படுங்க. முட்டி மோதி கத்துக்கங்க' என்றாராம் உணர்ச்சிவசப்பட்டு. அதிர்ந்து போன பேராசிரியர்கள் இவர் பேச்சை சீக்கிரம் முடிக்க மாட்டாரா என்று காத்திருக்க, அடுத்த அஸ்திரத்தை ஏவினார் அண்ணாச்சி.

நான் அஞ்சாதேவில் வைத்திருக்கிற ஒரு ஷாட்டை வேறு தமிழ் படங்களில் பார்த்திருக்க முடியுமா? பாலசந்தர், பாரதிராஜாவெல்லாம் பெரிய டைரக்டர் என்கிறார்கள். அவர்கள் படத்தில் கூட, என் படத்தில் வைத்திருக்கிற மாதிரி ஷாட் இல்லை தெரியுமா என்று மிஷ்கின் அடுக்கிக் கொண்டே போக, மேடையில் அமர்ந்திருந்த ஒரு பேராசிரியர் எழுந்தே போய்விட்டார்.

எரிச்சலுக்குள்ளான இன்னொரு மாணவர், 'நீங்களும் ஸ்னிக்தாவும் ஒரே வீட்டில் தங்கியிருக்கீங்களாமே?' என்று கேட்டு வைக்க, அதிர்ச்சிக்குள்ளான மிஷ்கின், 'அப்பா-மகள் உறவை இப்படி கொச்சைப்படுத்திறீங்களே' என்றார். கேள்விகள் ஏடாகூடமாக விழும் முன் கிளம்பிவிடுவோம் என்று நினைத்தாரோ என்னவோ, அடுத்தடுத்த வினாடிக்குள் ஆளே எஸ்கேப்!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter