First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
மீண்டும் கில்லாடி
தேதிகளை ஓதுக்கினார் பரத்

ஒரு காலத்தில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் சேலம் சந்திரசேகரன். இவரது Bharathதயாரிப்பில் உருவான படம்தான் கஜினி. சுள்ளான், பிப்ரவரி 14, சபரி, ஆகிய படங்களை தொடர்ந்து தயாரித்தவர், கஜினியை தவிர பிற படங்கள் காலை வாரியதால் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்.

கஜினியும் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட, அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டதால் ரிலீஸ் நேரத்திலும் சிரமப்பட்டார். அந்த நேரத்தில்தான் முருகதாசிடம் மீண்டும் தனக்கொரு படம் இயக்கி தருவதாக எழுதியும் வாங்கினார். இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டுதான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, முருகதாசை கடத்திச் செல்வது வரை என்னென்னவோ நடந்தது. இதெல்லாம் கொஞ்சம் கசப்பான பிளாஷ்பேக்.

இதற்கிடையில் இவர் தயாரிப்பில் பரத் நடித்து வந்த கில்லாடி படமும் பைனான்ஸ் பிரச்சனையால் பாதியிலேயே நின்றது. பலமுறை கால்ஷீட் கொடுத்தும் படம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டதால், பரத் வேறு படங்களில் பிசியாகிவிட்டார். தற்போது கில்லாடி படப்பிடிப்பை மீண்டும் துவங்க முடிவு செய்த சந்திரசேகர், பரத்திடம் தேதி கேட்டிருக்கிறாராம். தன்னால் ஒரு தயாரிப்பாளர் வேதனைப்படக் கூடாது என்பதால் பரத்தும் தேதிகள் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.

மீண்டும் எழுந்த சந்திரசேகர், தன்னை 'கில்லாடி' என்று நிருபித்தால் சந்தோஷமே!

-ஆர்.எஸ்.

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter