First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செப்டம்பர்-15 முதல் 1 கிலோ அரிசி ரூ.1: முதல்வர் அறிவிப்பு - பீகார் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்த படகு மூழ்கி 20 பேர் பலி - அண்ணா நூற்றாண்டு விழா ஆயுள் கைதிகள் 1000 பேர் விடுதலை; தமிழக அரசு முடிவு -கொழும்புவில் குண்டு வெடித்து 45 பேர் காயம்: அம்பாறையில் இலங்கை ராணுவத்தினர் உணவில் விஷம் 210 பேர் மருத்துவமனையில் அனுமதி - ஒரிஷாவில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு இந்திய தூதரை அழைத்து இத்தாலி அரசு கண்டனம் - விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்: 10 சிங்கள கடற்படை வீரர்கள் பலி
திசை மாறிய வைகைப்புயல்
தேடுதல் வேட்டையில் பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம்! கேட்கவே இனிப்பாக இருக்கிற இந்த தலைப்பில் நகைச்சுவை படம் Panjamirthamஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இப்படத்தை இயக்கவிருகிறார் ராஜு ஈஸ்வரன். ஏராளமான திரைப்படங்களை தனது அபிராமி மெகா மாலில் திரையிட்டு மக்களின் 'பல்ஸ்' அறிந்தவர் அபிராமி ராமநாதன். நினைத்தால் சிவாஜியை மிஞ்சுகிற அளவுக்கு மிரட்டும் பட்ஜெட்டில் படம் எடுத்திருக்கலாம். ஆனாலும், அகல கால் வைக்காமல் இப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

ஏ.வி.எம்.சரவணன், சரத்குமார், ராதாரவி, கே.ஆர்.ஜி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள். துவக்க விழாவில், அத்தி பூத்தாற் போல் வந்திருந்த இன்னொரு முகம் கே.டி.குஞ்சுமோன். அனைவருமே அபிராமியாரை நின்று நிதானமாக வாழ்த்திவிட்டு செல்ல, எல்லார் கையிலும் பழனி பஞ்சாமிர்தத்தை கொடுத்து இனிப்பாக அனுப்பி வைத்தார் ராமநாதன்.

முதல் நாள் படப்பிடிப்பில் இளம் பெண்கள் புடை சூழ ஆடிக் கொண்டிருந்தார் நாசர். அறுபதும், இருபதும் ஜோடி போட்டு ஆடுவதே நகைச்சுவைதானே? முதலில் இப்படத்தில் நடிக்க, வைகைப்புயலைதான் கேட்டிருந்தார்களாம். என்ன காரணத்தினாலோ, புயல் திசைமாறிப் போய்விட, அந்த இடத்தில் நடிக்க வைக்க, கோலிவுட்டில் பெரும் வேட்டையே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முழுநீள நகைச்சுவை படங்கள் வந்து அநேக வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அபிராமியாரின் இந்த முயற்சிக்கு ஒரு ரெட் கார்ப்பெட் போடலாமே!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter