'திரு போடா, திருமதி போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கதைப்படி, இன்டர்நேஷனல் டான்ஸ் காம்படிஷனில் வெற்றி பெறும் ஜோடியாக சிம்புவும், வரலட்சுமியும் நடிக்கிறார்கள். சிம்பு ஏற்கனவே நன்றாக டான்ஸ் ஆடக்கூடியவர். வரலட்சுமியும் ஏராளமான டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றவர். வெளிநாட்டில் படித்து வந்த இவருக்கு மேற்கத்திய நடனங்களும் அத்துபடி. சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், தந்தை சரத்குமாரின் சம்மதத்தோடு நடிக்க வந்திருக்கிறார்.
சிம்புவின் நண்பர் விக்கி என்கிற விக்னேஷ் சிவா இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் 15-ந் தேதியிலிருந்து 60 நாட்கள் தொடர்ந்து கனடாவில் நடக்கிறது ஷ§ட்டிங். அதற்குள் இந்த படத்தின் கதை நயன்தாராவை சீண்டுவது மாதிரி இருப்பதாக இறக்கை கட்டி பறக்கிறது வதந்தி. அப்படியென்ன கதையாம்?
டான்ஸ் ஒன்றையே உயிர் மூச்சாக நினைக்கும் கதாநாயகி பிற ஆண்களுடன் கட்டிப்பிடித்து ஆடுகிறார். இதை பார்த்து வேதனைப்படும் ஹீரோ, அவருக்கு அட்வைஸ் செய்கிறபோது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஹீரோயினை திருத்த வேண்டும் என்று நினைக்கிற ஹீரோ, தானும் பிற பெண்களுடன் கட்டிப்பிடித்து ஆடுகிறார். அப்போது 'என் புருசன்தான், எனக்கு மட்டும்தான்' என்ற உணர்வு வருகிறது ஹீரோயினுக்கு. மனம் திருந்துகிற இருவரும் இணைந்து போட்டியில் ஆடி வெற்றி பெறுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
இதில் நயன்தாராவின் சொந்த விவகாரத்தை இழுத்திருக்கிறாராம் சிம்பு. இந்த படத்தின் கதை தன்னை வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த நயன்தாரா பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்களை பதிவு செய்கிறவன்தான் நல்ல படைப்பாளியாக இருக்க முடியும் என்பார்கள். சிம்பு எப்படி?
-ஆர்.எஸ். |