First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செப்டம்பர்-15 முதல் 1 கிலோ அரிசி ரூ.1: முதல்வர் அறிவிப்பு - பீகார் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்த படகு மூழ்கி 20 பேர் பலி - அண்ணா நூற்றாண்டு விழா ஆயுள் கைதிகள் 1000 பேர் விடுதலை; தமிழக அரசு முடிவு -கொழும்புவில் குண்டு வெடித்து 45 பேர் காயம்: அம்பாறையில் இலங்கை ராணுவத்தினர் உணவில் விஷம் 210 பேர் மருத்துவமனையில் அனுமதி - ஒரிஷாவில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு இந்திய தூதரை அழைத்து இத்தாலி அரசு கண்டனம் - விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்: 10 சிங்கள கடற்படை வீரர்கள் பலி
கமலின் கைங்கர்யம்
சந்தோஷத்தில் சரண்!

பல நாள் பிரச்சனை, ஒரே நாளில் முடிந்து நிம்மதியாக இருக்கிறார் இயக்குனர் KamalHasan-Charanசரண். வசூல்ராஜா படத்திற்கு பிறகு கமல் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி தயாரிப்பதாக முடிவெடுத்த சரண், அதற்காக சுமார் 2 கோடி ரூபாயை அட்வான்சாக கொடுத்திருந்தார் கமலுக்கு. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், படத்திலிருந்து விலகிக் கொண்ட கமல், அட்வான்சை மட்டும் திருப்பிக் கொடுக்காமல் வைத்துக் கொண்டார். இதை பலமுறை கேட்டபிறகும், சரண் கைக்கு வந்தபாடில்லை அட்வான்ஸ்.

தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டது இந்த விவகாரத்தில். அப்படியும் பிரச்சனை தீராத காரணத்தால் நீதிமன்றத்துக்கு போக முடிவெடுத்தார் சரண். வானத்து சாமி எரவானத்தில் இறங்கிய மாதிரி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முன்வந்தார் கமல்.

இந்த பணத்தை பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிதான் கமலுக்கு அட்வான்சாக கொடுத்திருந்தாராம் சரண். மேற்படி பைனான்சியரை நேரில் அழைத்த கமல், சரணையும் வைத்துக் கொண்டு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டாராம். பிறகென்ன, தடை நீங்கிய சந்தோஷத்தில், மோதி விளையாடு என்ற படத்தை இயக்கி வருகிறார் சரண்.

-ஆர்.எஸ்.

hotnews
.
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter