திட்டமிட்டு படமெடுக்கிற விஷயத்தில் குட்டி கே.எஸ்.ரவிக்குமார் என்றே கருதப்படுபவர் பேரரசு. குறுகிய நாட்களுக்குள் படமெடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதே நோக்கமாக இருப்பவர்கள் இருவரும். ஆனால், கண்டபடி கால்ஷீட் சொதப்பினால், திட்டம் போட்டு எடுத்தாலும் கஷ்டம்தானே மிஞ்சும்?
காலை 9 மணிக்கு வந்து மாலை 6 மணிக்கு டாண் என்று கிளம்பிவிடும் விஜயை வைத்தே குறுகிய நாட்களில் படம் எடுத்தவர், அர்ஜுனை வைத்து எடுக்கிற படத்தை முடிப்பதற்குள் 'அந்தல சிந்தல' ஆகிவிடுவார் போலிருக்கிறது. பேரரசு தற்போது இயக்கி வரும், திருவண்ணாமலை படத்தின் ஷ§ட்டிங் கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த ஏரியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அப்படியே திருவண்ணாமலைக்கு இடம் பெயர்வதாக திட்டம். ஆனால், ஒரு நாள் கூட சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லையாம் அர்ஜுன்.
இதனால் அப்செட் ஆன பேரரசு, பலமுறை சொல்லிப் பார்த்தும் அர்ஜுன் கேட்காததால் அவரை வெளிப்படையாகவே கடிந்து கொண்டாராம். ஆனாலும், நிலைமை அப்படியே தொடர்வதாக கேள்வி.
-வம்பன் |