தீ.நகர் படத்தில் நடித்த உதயதாரா எடுத்த திடுக்கிடும் நடவடிக்கைகளால், அவசரம் அவசரமாக கால்கட்டு போட்டுவிட்டார்கள் அப்படத்தின் இயக்குனர் திருமலைக்கு. படப்பிடிப்பின்போது காதல் வயப்பட்ட திருமலை, ரிலீசுக்கு பிறகும் தன்னை தொந்திரவு செய்வதாக மீடியாக்களிடம் புலம்பினார் உதயதாரா. தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தால் போலீசிடம் போவேன் என்று அவர் மிரட்ட, காதலை எடைக்கு போட்டுவிட்டு, வேறொருவரின் கரம் பிடித்தார் திருமலை.
உதயதாராவே ஏங்குகிற அளவுக்கு வாழ்வில் வெற்றியடைவேன் என்று சபதம் எடுத்திருக்கும் அவர் ஷாம் நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதற்கிடையில் உதயதாராவுக்கு ஒரு தமிழ் படங்களும் வாய்க்கவில்லை. செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுப்பாரோ என்று அஞ்சியே பலர் ஒதுங்கிக் கொள்கிறார்களாம்.
தைரியமானவராயிற்றே சேரன்? உதயதாரா நடிக்க, தனது ஆட்டோகிராப் 2 ம் பாகத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறாராம். கோபிகாவுக்கு திருமணம் ஆகவிருப்பதால், அவரது கேரக்டரில்தான் நடிக்கவிருக்கிறார் உதயதாரா. பொதுவாகவே சேரன் படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கும் அவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி, மீடியாக்களின் கரிசனத்தோடு புயலாக விஸ்வரூபம் எடுக்கும். இந்த லட்சணத்தில், உதயதாராவோடு டூயட் ஆடப் போகிறார் சேரன். என்னவெல்லாம் நடக்குமோ?
-வம்புராசா
|