'மினரல் வாட்டர் நாயகி' என்றே அன்போடு ஸாரி, துன்பத்தோடு அழைக்கப்பட்டவர் நிலா! கொடுக்கிற சம்பளத்தை விட பராமரிப்பு செலவு அதிகமாவதால், நிலா நிலா ஓடிப்போ என்று கூறிவிட்டார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்.
அறிமுகப்படுத்திய எஸ்.ஜே.சூர்யாவே, நிலா விஷயத்தில் விலகி நின்றதால் வேறு வழியில்லாமல் மாலிவுட், பாலிவுட் என்று சுற்றி பார்த்தார். அங்கேயும் மினரல் வாட்டர் விலை லிட்டருக்கு 12 தானே! வேறு வழியில்லாமல், சினிமாவே வேண்டாம் என்று முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சினிமாவில் வாய்ப்பு இல்லையென்றால் சின்னத்திரை சீரியலுக்கு தாவிவிடும் நடிகைகள் மத்தியில் நிலா செய்தது புதுமைதான். டெக்னிகல் ஏரியாவில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். அங்கேயும் பிரச்சனை வந்துவிட்டது நிலாவுக்கு. நள்ளிரவு தாண்டியும் கண் விழிக்க வேண்டியிருந்ததால், கண்ணை சுற்றி கரு வளையம் விழ துவங்கியதாம். இதென்ன முதலுக்கே மோசம் என்று நினைத்தவர், மறுபடியும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.
நொந்துபோகிற நிலையில் இருந்தாலும், வந்தாரை வரவேற்கும் வழக்கமுள்ள தமிழகம், நிலாவையும் அரவணைத்துக் கொண்டது. ஜெகன்மோகினி படத்தில் நிலாவுக்கு முக்கியமான கேரக்டர். கவர்ச்சி நாயகி நமீதாவுடன் கதாநாயகன் ராஜாவுக்காக போட்டி போடுகிறாராம். எனக்கும் நமீதாவுக்கும் ஈக்குவல் கேரக்டர் தெரியுமா என்கிறார். நமீதா காதில் விழுகிறதா?
-ஆர்.எஸ். |