First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
த்ரிஷாவின் கேட்-வாக்!
-ஏழு வருடங்களுக்குப் பின் பரவசம்

சுமார் ஏழு வருடங்களுக்கு முன் கேட்-வாக் என்று சொல்லப்படும் பூனை நடை Trishaநடந்தவர்தான் த்ரிஷா! ரேம்ப் ஷோ எனப்படும் இத்தகைய ஷோக்கள் உலகின் எல்லா நகரங்களிலும் பிரசித்தம். இதுபோன்ற ஷோக்களில் கலந்து கொள்வதற்காகவே தனி மாடல்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர்தான் த்ரிஷா! பின்பு விளம்பர படங்களில் நடித்தார். சினிமாவில் நுழைய வேண்டும் என்று முடிவு செய்தவுடன், நேரடியாக ஹீரோயின் ஆகாமல், முதலில் ரிச் கேர்ள் என்று சொல்லப்படும் காஸ்ட்லி துணை நடிகையாக அறிமுகம் ஆனார்.

இப்படி ஏணிப்படியில் ஏறியவர், இன்றைக்கு உச்சாணிக் கொம்பில் இருப்பதற்கு காரணம் உழைப்பு! தென்னக மொழிகளில் டாப் ஹீரோயின்களை கணக்கெடுத்தால், முதல் மூன்று இடங்களில் இருக்கிறார் த்ரிஷா. இந்த நிலையில் பழசை மறக்காமல் ரேம்ப் ஷோவில் கலந்து கொள்வதற்கு எத்தனை பெரிய மனசு வேண்டும்? பெரிய மனசோடு எஸ்.எஸ்.ஸ்பிரிங் சம்மர் 2008 என்ற ரேம்ப் ஷோவில் கலந்து கொண்டார் அவர்.

இதுபற்றி என்ன சொல்வார் என்று காத்திருந்த பலருக்கு ஆச்சர்யம். மனதில் பட்டதை மறைக்காமல் பேசினார் த்ரிஷா. ஏழு வருடங்கள் ஆகிவிட்டது இப்படி நடந்து. முன்பு போல் என்னால் நடக்க வரவில்லை. கேமிராவுக்கு முன்னால் கூட ஈசியாக நடித்துவிடலாம். ஆனால் இதுபோல் நடப்பதுதான் கஷ்டம் என்றார் அவர்.

-ஆர்.எஸ்.

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter