மணி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், யானைதான் வந்தபாடில்லை. கலகம் என்ற படத்தில் திருமாவளவன் நடிக்கப் போவதாக சொன்னார்கள். அந்த படத்திற்காக தாடியெல்லாம் வளர்த்தார் அவர். ஆனால் படத்தை அப்படியே போட்டுவிட்டு என் கனவு நீதானடி என்ற படத்தை இயக்க போய்விட்டார் கலகத்தை இயக்குவதாக இருந்த களஞ்சியம். அதன்பின் மின்சாரம் என்ற படத்தில் நடிப்பதோடு, பாடலாசிரியராகவும் பிரமோஷன் ஆனார் திருமா. இப்போது லேட்டஸ்டாக இன்னொரு தகவல். தங்கர்பச்சான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறாராம் சிறுத்தைகளின் தலைவர்!
இந்த முறை கிராமத்தை நோக்கி போகவில்லை தங்கர். சிட்டியில் நடக்கிற கதையை கையில் எடுத்திருக்கிறார். இந்த கதைக்கு திருமா எப்படி பொருந்துவார் என்பதெல்லாம் போக போக தெரியும்.
இடையில் மிஷ்கினை ஹீரோவாக நடிக்க வைத்து அப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த தங்கர், தனது பார்வையை திருமா மீது பதித்தது ஏன் என்பதற்கு விளக்கமான விபரம் கிடைக்கவில்லை. என்றாலும், திருமாவின் முடிவு திருப்தியாகவே இருக்கிறது ரசிகர்களுக்கு. ஏனென்றால் ஒரே சிந்தனை உடையவர்கள்தானே இருவரும்!
-ஆர்.எஸ். |