'நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்தான்' என்று பேட்டிகளில் பதில் கூறினாலும், அண்டர்கிரவுண்டில் ஒரு அரசியல் கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது தனுஷ§க்கும், சிம்புவுக்கும். அதை நிருபிப்பது போல் சமீபத்தில் ஒரு சம்பவம். இதில் பலிகடா ஆகியிருக்கிறார் வெற்றிமாறன்.
பொல்லாதவன் ஹிட்டுக்கு பிறகு தனுஷ§ம் வெற்றிமாறனும் தங்கள் நட்பை 'பெவிக்கால்' ஊற்றி பிசைந்து கொண்டார்கள். பிரிக்கவே முடியாத நட்பாகி போனது இருவருக்கும். எங்கள் கூட்டணி மீண்டும் இணையும் என்று கூட்டறிக்கை விட்டவர்கள், சுட சுட பொல்லாதவன் தயாரிப்பாளரான கதிரேசனுக்கே அடுத்த படத்தை செய்துவிடலாம் என்றும் முடிவு செய்தார்கள். இதற்கிடையில் படிக்காதவனை துவங்கிய தனுஷ், வெற்றிமாறன் படத்தையும் துவங்கி இரண்டு படப்பிடிப்பையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்ற முடிவுக்கும் வந்தார்.
இங்குதான் விதி பல்லாங்குழி ஆடியது. சிம்புவிடம் இருந்து எனக்கு ஒரு கதை இருந்தா சொல்லுங்களேன் என்ற அழைப்பு வந்தது வெற்றி மாறனுக்கு. அழைத்தால் போகாமலா இருக்க முடியும்? போய் ஒரு கதையையும் சொல்லி வைத்தார். அந்த கதை சிம்புவுக்கு பிடித்துப் போக, நடிக்க சம்மதமும் சொல்லிவிட்டார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவர, கோபம் தலைக்கேறியது தனுஷ¨க்கு. வெற்றிமாறனிடம், 'நமது படத்தை டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம்' என்று கூறிவிட்டாராம். தற்போது படிக்காதவன் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
'நொண்டியடிச்ச தவளை வண்டி சக்கரத்தில் மாட்டிய கதையா ஆயிடுச்சே' என்று வருந்துகிறார் வெற்றி மாறன்.
-வம்புராசா
|