|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பயங்கரவாதிகள் நுழைய முயற்சி: பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருந்த அணுமின் நிலைய விபத்து நஷ்ட ஈடு மசோதா எதிர்கட்சிகள் எதிர்பால் நிறுத்தி வைப்பு - பொதுத்தேர்வு நடக்கும் நேரத்தில் மின்சாரம் துண்டிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் - இளைஞர் காங்கிரஸ் தேர்தலை பார்வையிட ராகுல் நாளை திருச்சி வருகை
இதய அறுவை சிகிச்சை: கமல்ஹாசனின் பங்கு!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இருப்பதை பெருமையாக கருதும் kamalahasanநடிகர்களுக்கு மத்தியில், மலையாளிகளின் சங்கத்திற்கு அம்பாசிடராக ஆகியிருக்கிறார் கமல்ஹாசன். இந்த அமைப்பு ஒவ்வொரு வருடமும் ஏழைக்குழந்தைகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. இந்த வருடம் 125 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் மாபெரும் பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யும் விதமாகதான் தன்னை அம்பாசிடராக நியமிக்க அனுமதி கொடுத்திருக்கிறார் கமல்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற மலையாள மனோரமா பத்திரிகை, இவர்களின் முயற்சிக்கு மீடியா பார்ட்னராக இருப்பதுடன், இந்த சேவைக்கு கை கொடுக்கும் விதமாக 25 லட்ச ரூபாயையும் வழங்கியிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விதமாக சென்னையில் பிப்ரவரி 24-ந் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார் கமல். இந்த இசை நிகழ்ச்சிக்கு 'இருதய ராகம் 2008' என்று பெயரிட்டிருக்கிறார்கள். கோலிவுட், மாலிவுட் பாடகர்கள் பங்குபெறுகிறார்கள். நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிடும் விதமாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் கமல். அவர் பேசும்போது, 'கூலி வேலை செய்யும் ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளை காப்பாற்றும் இந்த கவுன்சிலின் செயலுக்கு நானும் உதவியாக இருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எங்கள் நற்பணி மன்றத்தின் சார்பாக இதுவரை 19 இதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். இவர்கள் செய்யும் இந்த உதவியால் பயனடைய போவது மலையாளிகள் மட்டுமல்ல, தமிழ் குடும்பங்களும்தான்' என்றார்.

இதற்கு முன் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தொடர்பான விஷயங்களிலும் தன்னை முன்னிறுத்திக் கொண்ட மனிதாபிமானிதான் இந்த கலைஞானி.

-ஆர்.எஸ்.அந்தணன்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter