இந்தமுறை கூடிய சட்டப்பேரவையில் ஸ்ரேயாவின் குட்டை பாவாடையிலிருந்து, டி.வி நிகழ்ச்சிகளின் ஆபாசக்கூத்து வரைக்கும் பேசப்பட்ட துதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகியிருக்கிறது. பா.ம.க எம்.எல்.ஏ வேல்முருகன், தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசம் தலைவிரித்து ஆடுவதாக ஒரு பிரச்சனையை எழுப்பினார். இவர் சமீபத்தில் வெளிவந்த 'வாழ்த்துகள்' படத்தில் நடித்தவர் என்பதும் இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அவர் கூறியதை போலவேதான் அமைந்திருக்கின்றன சில நிகழ்ச்சிகள். கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'மானாட மயிலாட' என்ற நடன நிகழ்ச்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அதற்கு காரணமும் இருக்கிறது. நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொள்ளும் நமீதாவை பார்க்கவே ஒரு கூட்டம் டி.வி முன் அமர்ந்துவிடுகிறது. அவருடைய ஆடையை விடவும் கவர்ச்சியானது அவர்கள் ஆடுகிற ஆட்டம்! விசிலடிக்காத குறையாக நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் இளசுகள்.
இது ஒருபுறம் இருக்க, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகிப்போட்டியும் அதிர வைக்கிறது. அழகி போட்டிகளின் விதிமுறைகள் என்னென்ன என்பதை அலசுகிறவர்கள், மார் அளவு, இடுப்பு அளவு, தொடை அளவு ஆகியவை இந்த போட்டிக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை சொல்வதோடு, அளவெடுப்பதையும் காண்பிக்கிறார்கள். அடடா..!
இந்த போட்டி எதில் போய் முடியுமோ?
-பரசுராமன் |