First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
அதிகாலை ஐந்தரைக்கே டூயட்!
- சேனல்களும் கோணல்களும்!

தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் SS Music VJSஇப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள்.

முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந்தோஷத்தை இந்த புற்றீசல் சேனல்கள் கொடுக்கின்றனவா? ஏன் இல்லை? என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத இளம் மாணவி ஒருவர். எஸ்.எஸ் சேனல்தான் என் சாய்ஸ் என்கிற அந்த பெண், அவர்கள் செலக்ட் பண்ணி தருகிற பாடல்களும், அதை தொகுத்து வழங்கும் காம்பியர்களின் தோழமையும் ரொம்பவே பிடிச்சிருக்கு என்கிறார்.

ஏராளமான இளசுகளை கவர்ந்திழுக்கும் சன் மியூசிக் அதிகாலை ஐந்து மணிக்கே டூயட்டுகளை ஆரம்பித்துவிடுகிறது. அந்த நேரத்தில் பக்தி பாடல்களை ஒலிபரப்பலாமே? மியூசிக் சேனல் என்றால் எல்லா வகையான பாடல்களும் இருப்பதுதானே முறை என்கிற அந்த நடுத்தர வயதுக்காரர், பிற நேரங்களில் அவர்கள் தொகுத்து தருகிற பாடல்கள் இனிமையானவைதான் என்கிறார்.

கலைஞர் டி.வி யின் இசையருவி, ராஜ் மியூசிக் சேனல், ஜெயா மேக்ஸ் ஆகிய இசைச் சேனல்கள் ஏதாவது புதுமையை செய்யும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் நேயர்கள். எப்.எம்.ரேடியோக்களை போலவே பாடல்களை தரம் பிரித்து நேரத்திற்கேற்றார் போல் ஒலிபரப்பினால், ஏராளமான நேயர்களை கவரலாம் என்று ஐடியா கொடுக்கிறார்கள் சில பாடல் விரும்பிகள். இரவு பத்து மணிக்கு மேல் அற்புதமான பழைய பாடல்களை இப்போதும் ஒலிபரப்ப தவறுவதில்லை எப்.எம் கள்! சேனல்கள் இப்படி மஞ்சு விரட்டு நடத்திக் கொண்டிருக்க, ஆடியோ கம்பெனிக்காரர்களின் வயிற்றில் கொம்பு ஏறிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

முன்பெல்லாம் ஒரு படத்தின் ஆடியோ உரிமையை விற்று மியூசிக் டைரக்டருக்கு சம்பளமாக கொடுத்துவிடலாம். ஆனால், இப்போது எந்த படமும் அந்த அளவுக்கு விலைபோவதில்லை என்பதுதான் நிதர்சனம். எல்லா பாடல்களையும் சேனல்களும், எப்.எம்.களும் பிளாட் போட்டு விற்று விடுவதால், கடைகளில் குறைந்த பட்ச சிடி-கள் கூட விற்பதில்லை என்கிறார்கள் மியூசிக் நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.
ஆனாலும் யுவன்சங்கர் ராஜா எழுபது லட்சமும், ஹாரிஸ் ஜெயராஜ் எண்பது லட்சமும், கேட்டு எரிகிற வயிற்றில் 'போகி' கொண்டாடுவதுதான் வேடிக்கை!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter