First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பெங்களூரில் அடுத்து அடுத்து குண்டு வெடிப்பு: 5 பேர் பலி, ஏராளமானோர் காயம் - பாராளுமன்ற சபாநாயகராக சோம்நாத் சட்டர்ஜி நீடிப்பார்: பிரதமர் மன்மோகன்சிங், லாலு பிரசாத் நேரில் சந்தித்து ஆதரவு - தமிழகத்திற்கு தினந்தோறும் 100 மெகாவாட் மின்சாரம்: முதல்வரின் வேண்டுகோளை ஏற்றது மத்திய அரசு - மின்தடையை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்: ராமதாஸ் அறிவிப்பு - மத்திய அரசுக்கு ஆதரவளித்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ம.தி.மு.க வில் இருந்து நீக்கம்
ஜாக்கெட்டும், ஜாக்பாட்டும்!
-குளிர வைக்கும் குஷ்பு

சர்ச்சைகளின் நாயகியாக இருந்தாலும், டி.ஆர்.பி ரிப்போர்ட்படி குஷ்புவின் ஜாக்கெட்டுக்கு ஸாரி... ஜாக்பாட்டுக்குதான் மவுசு அதிகமாம். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, இந்த நாள்வரைக்கும் ஜாக்பாட் நிகழ்ச்சியை அப்படி கொண்டாடுகிறார்களாம் தாய்குலங்கள்.

குடும்பம், குழந்தைகள் என்று பிசியாக இருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர் கலை Kushbooநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். படங்களில் நடிக்கிறார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கோர்ட் பக்கமும் தலை நீட்டுகிறார். போதாதென்று கணவர் இயக்கும் படங்களுக்கு கதாநாயகி தேடியும் அலைகிறார். இப்படி நாள் முழுவதும் பிஸியாக இருந்தாலும், குஷ்புவின் குடும்ப நிகழ்ச்சி இந்த ஜாக்பாட்தான்.

நிகழ்ச்சியை வெற்றிப்படியில் ஏற்றிய தாய்குலங்கள் என்ன சொல்கிறார்கள்? குஷ்பு Kushbooபேசும் தமிழ் எங்களுக்கு பிடிச்சிருக்கு. எங்களை பொறாமை பட வைக்கும் அவருடைய காஸ்ட்யூம் பிடிச்சிருக்கு. எங்களோடு நேரடியாக பேசுவது போல் பேசும் அவருடைய ஸ்டைல் பிடிச்சிருக்கு.

குஷ்பு என்ன சொல்கிறார்? இந்த பெருமை முழுக்க ஜெயா டி.விக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் முரளி ராமனுக்கும்தான். எனக்கு தமிழ் தெரியாது என்று நான் மறுத்தபோது, வற்புறுத்தி அழைத்து நிகழ்ச்சி நடத்த வைத்ததே அவர்தான். இன்று இந்தளவுக்கு இது வெற்றியாக அமையும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் என் நோக்கம் இருக்கிறது. என் நம்பிக்கை பலிக்கும் என்கிறார். பலிக்கட்டுமே.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter