First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
கேபிள் டிவி நிகழ்ச்சிகளை கண்காணிக்க மாவட்ட, மாநில அளவில் தனி கமிட்டிகள்

கேபிள் டிவிகளில் ஒளிபரப்படும் நிகழ்ச்சிகளை கண்காணிக்க மாவட்ட, மாநில அளவிலான தனிக் கமிட்டிகளை அமைக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வழிகாட்டுதல் அளித்துள்ளது.

1995-ம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்கு முறை சட்டத்தில் இந்தக் கமிட்டிகளை அமைப்பதற்கான வழிவகை ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, கமிட்டிகளை அமைக்கலாம் என தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. கேபிள் டிவிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வித்த்தில் அமைந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் அதை ஏற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா இல்லையா என்பதை இந்தக் கமிட்டிகள் கண்காணிக்கும். மாநில அளவிலான கமிட்டிக்கு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி தலைவராக பதவி வகிப்பார். டிஜிபி, சமூக நலத்துறை அதிகாரி. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அதிகாரி, முன்னணி தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், கல்விநாளர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர். மாவட்ட அளவிலான கமிட்டிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமைப் பொறுப்பு வகிப்பார்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter