First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு
விஜயகாந்த் தொடங்கவிருக்கும் புதிய தொலைக்காட்சி.

ஒருகாலத்தில் சின்னத்திரைக்கு பேட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை Vijayakanthகொள்கையாக வைத்திருந்தார் விஜயகாந்த். காலம் செய்த கோலம், அவரே தொலைக்காட்சி ஒன்றை தொடங்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம். அரசியல் கட்சி துவங்கி, நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் விஜயகாந்த், தனக்கென்று ஒரு சேனல் இருந்தால், அந்த சுற்றுப்பயணத்தையும் மக்களின் வரவேற்பையும் இருட்டடிப்பு இல்லாமல் வெளிக்காட்டலாம் என்று நினைக்கிறாராம். இதை வேக வேகமாக செயல்படுத்த களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கும் முக்கியஸ்தர்கள், பூர்வாங்க வேலைகளையும் துவங்கிவிட்டதாக தெரிகிறது. வழக்கம் போல் முன்னணி சேனல்களில் இருந்து அனுபவம் பெற்ற ஆட்களை வளைத்து போடும் முயற்சியும் நடந்து வருகிறதாம். கையோடு கையாக ஒரு அரசியல் பத்திரிகையும் தொடங்க முடிவு செய்திருக்கிறாராம் விஜயகாந்த். தனக்கு ராசியான கேப்டன் என்ற பெயரிலேயே இரண்டையும் வெளிக் கொண்டு வருவார் போலிருக்கிறது. இதை நிர்வகிப்பவர்கள் அவரது மனைவியும் மைத்துனரும் என்பதை நாம் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?.

-ஆர்.எஸ்

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter