|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மர்மயோகியில் த்ரிஷா?
தொடரும் பேச்சு வார்த்தைகள்

ரஜினி, கமல் தொடங்கி அஜீத், விஜய், விக்ரம் வரை ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறார் Trishaத்ரிஷா. இதற்கு அடுத்த தகுதியில் உள்ள ஹீரோக்களின் படங்களில் நடிப்பதில்லை என்பது அவரது பாலிசி. ஆனால் அவர்கள் கொடுக்கும் விருந்துகளில் கலந்து கொள்வதில் மட்டும் எந்த பேதமும் பார்ப்பதில்லை அவர். என்னுடன் நடிக்க மறுக்கிறார் என்று விஷால் வெளிப்படையாக அறிவித்தாலும், மிக்சிங் விஷயத்தில் இரண்டு பேரும் கோலி சோடாவும், குவார்ட்டர் பாட்டிலும் மாதிரி!

தொழில் வேறு, நட்பு வேறு என்ற த்ரிஷாவின் கொள்கையை சீண்டி, சிராய்ப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் பரத். மோசர்பியர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் பரத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவை அணுகினார்களாம். ஆனால் பரத்துடன் நடிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டாராம் த்ரிஷா. நிறைய கமிட்மென்ட் இருக்கு என்று இந்த மறுப்புக்கு அவர் காரணம் சொன்னாலும், உண்மை காரணம் மேற்படி கொள்கைதான்.

இதற்கிடையில் மர்மயோகி படத்தில் நடிக்க த்ரிஷாவை கேட்டிருக்கிறார்களாம். இன்னும் சம்பள விஷயங்கள் முடிவுக்கு வராததால் பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாதாரணமாகவே கோடிகளை தொட்டுவிட்ட த்ரிஷா, நீண்டகால தயாரிப்பு என்பதால் அதையும் தாண்டி கேட்பார் போல் தெரிகிறது. அதையும் தாண்டி புனிதமானது காதல் மட்டுமா? த்ரிஷாவின் சம்பளமும்தான்!

-ஆர்.எஸ்.

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter