First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
இளையராஜாவின் திடீர் விசிட்
இன்பத்தில் திளைத்த ஷ§ட்டிங் ஸ்பாட்!

பூஜை நேரத்தில் மழை வந்தால் நல்ல சகுனம். அதுவே இசை மழையாக இருந்தால், Rajkiranஇன்னும் சந்தோஷம்தானே? இந்த முழு சந்தோஷத்தையும் அனுபவித்திருக்கிறது சரித்திரம் படக்குழு. டைரக்டர் சாமி இயக்கும் சரித்திரம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இம்மாதம் 25-ந் தேதி துவங்கியது.

முதல் ஷாட்டுக்கு தயாரானார் சாமி. இந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. வெள்ளை கார் ஒன்றில் வந்திறங்கினார் ராஜா! இசையின் ராஜா, இளையராஜா! படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது. நடிகர் ராஜ்கிரண் ஓடிச்சென்று ஆசையோடு அவரை வரவேற்றார். அந்த நேரத்தில் ராஜாவின் வருகை எப்படி? வேறொன்றுமில்லை...

ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளன்று பொள்ளாச்ச¤க்கு அருகில் இருக்கும் புரவிப்பாளையத்திற்கு வருவராம் இசைஞானி. அங்கிருக்கும் மகான் ஒருவரின் சமாதிக்கு வந்து வணங்குவது அவரது வழக்கம். அன்றும் அப்படி வந்தவருக்கு அருகில் ராஜ்கிரண் நடிக்கும் படமான சரித்திரம் ஷ§ட்டிங் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. பொதுவாக எந்த பட பூஜைக்கும் செல்பவரல்ல ராஜா. ராஜ்கிரண் என்றதும் நேரடியாக போய் வாழ்த்தலாமே என்ற எண்ணத்தில் வந்தாராம்.

சாமி உள்ளிட்ட பலரும் அவரது காலில் விழுந்து வணங்க, எல்லாரையும் வாழ்த்திவிட்டு புறப்பட்டது இசை மழை!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter