First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
பி.வாசு வீட்டு முன் ஆர்ப்பாட்டம்
முடிதிருத்தும் தொழிலாளர்கள் முடிவு

தலைக்கு வந்தது 'விக்'கோடு போச்சு என்று போய்விடக் கூடிய சமாச்சாரமல்ல இது. P.Vasuசற்று சீரியசாகவே யோசிக்க வேண்டிய விஷயம். குசேலன் படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் பல்லாயிரக்கணக்கான முடி திருத்தும் தொழிலாளர்களை அவமானப்படுத்தும் செயலாக இருப்பதாக கூறி, அவர்களும் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். (கொஞ்சம் லேட்டுங்க ஐயா)

திருகுவலிக்கு லேகியம் சாப்பிட்டு, வயிற்று வலியையும் சேர்த்து அனுபவிப்பது போலாகிவிட்டது ரஜினியின் நிலைமை. பாலசந்தருக்கு உதவப் போய், பல தரப்பினரின் குத்தல், குடைச்சல்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை. ஒரு வழியாக விநியோகஸ்தர்கள், மற்றும் தியேட்டர் அதிபர்கள் பிரச்சனையை சமாளித்தார். அதற்குள் இந்த பிரச்சனை. நல்லவேளை...இவர்கள் ரஜினியை குறை சொல்லாமல் படத்தின் இயக்குனர் பி.வாசுவை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான முடி திருத்துவோரை கேவலப்படுத்தியிருக்கிற பி.வாசு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். எதிர்வரும் 29-ந் தேதி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் பி.நடேசன் தெரிவித்திருக்கிறார். அன்றைய தினம் டைரக்டர் வீட்டில் இருப்பாரா? அல்லது டிஸ்கஷனுக்காக வெளியூரில் சென்றிருப்பாரா?

-ஆர்.எஸ.

 

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter