First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக காவல்துறையை கண்டித்து 23ந் தேதி அதிமுக உண்ணாவிரதம் - இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் மலிந்துள்ளதாக அர்ஜுன் ரணதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் - இங்கிலாந்து நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழப்பிரச்னைக்காக போராட்டம் - சிங்கப்பூர் என்ஒஎல் கப்பல் நிறுவனத்தில் 1000 பேர் பணி நீக்கம் - இலங்கையில் போரை நிறுத்த ஐ.நா.சபை வற்புறுத்த வேண்டும்: பா.ம.க ஜி.கே.மணி
ஸ்ரேயா எஸ்கேப்...
-டென்ஷனில் இயக்குனர்

கட்டுகட்டாக கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து போட்டிருப்பார் போலிருக்கிறது Kanthaswamiஸ்ரேயா. கந்தசாமி படத்தில் நடிக்கத் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. பொதுவாக, ஹீரோயின் போர்ஷன் பதினைந்து நாட்கள், அல்லது இருபது நாட்களில் முடிந்துவிடும். நாலு பாட்டு, ஒரு ரேப் என்று அளந்து வைத்து நாட்களை கேட்கும் சினிமா இயக்குனர்களில் சுசிகணேசன் மட்டும் கொஞ்சம் கறார்.

ஹீரோ எத்தனை நாள் தேவைப்படுவாரோ, அத்தனை நாட்கள் ஹீரோயினும் வேண்டும் என்று சொல்லிவிட்டார் போலிருக்கிறது. சென்னை, மெக்சிகோ, மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. போகிற இடமெல்லாம் லக்கேஜ் போலவே போய் வந்திருக்கிறார் ஸ்ரேயாவும்.

கொடுத்த கால்ஷீட்டுகள் போதும் என்று முடிவெடுத்துவிட்ட ஸ்ரே, திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் வேறு படத்தில் நடிக்க போய்விட்டாராம். இப்போது அதுதான் பெரிய டென்ஷனை கொடுத்திருக்கிறது சுசிகணேசனுக்கு. எதிர்வரும் தீபாவளியை குறி வைத்து பரபரப்பாக வேலைகள் நடந்து வரும் நிலையில், பேட்ச் வொர்க்குக்கு கூட ஸ்ரேயாவை தேட வேண்டியிருக்கிறதே என்ற கவலை அவருக்கு.

பார்ப்பதற்குதான் ஸ்ரேயா ஜில். இதுபோன்ற விஷயங்களில் வள்....!

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter