First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
7000 கோடி மோசடி செய்துள்ள சத்யம் கம்யூட்டர்ஸின் ராமலிங்க ராஜூ கைதாகிறார் - சென்னை பறக்கும் சாலைக்கு மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார் - விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இலங்கையில் தடை - ஈழத்தமிழர் பிரச்னைக்காக மன்மோகன் சிங்கிற்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி செய்து 500 பேர் கைது - சென்னையில் புத்தக கண்காட்சி துவங்கியது - இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடிவு
நடிக்க வந்த இளம்பெண்...
சூறையாடிய நடிகரின் ஆட்கள்?

பரபரப்பை கிளப்பியிருக்க வேண்டிய விஷயம் ஒன்று, சைலண்டாக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. புலனாய்வு பேனாக்களையே மூட வைத்திருக்கும் இதன் பின்னணி என்ன? ஆழ்வார்ப்பேட்டை ஏரியாவுக்கு விசிட் அடித்தால், அள்ளி விடுகிறார்கள் சில தகவல்களை!

சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரிடம் இருந்த ரசிகர் மன்ற தலைவரும், அவரைப் போல பொறுப்பு வகித்த மேலும் சிலரும், நடிகரின் ஆணையின் பேரில் நீக்கப்பட்டுள்ளனர். வெறும் கையாடல் சமாச்சாரம்தான் இந்த நீக்குதலுக்கு காரணம் என்று நினைத்திருப்பவர்களுக்கு ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கிறது மேற்கொண்டு வரும் தகவல்கள்.

சில வாரங்களுக்கு முன்பு நடிகரின் அலுவலகத்திற்கு திருச்சியிலிருந்து வந்திருந்தார் இளம் பெண் ரசிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்ப்பதற்கு படு லட்சணமாக இருந்த இந்த பெண், திருச்சியில் ப்ளஸ் 2 வரை படித்தவராம். தனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும், நடிகரின் புதிய படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினாராம். அந்த நேரத்தில் அங்கிருந்த மன்ற நிர்வாகி, 'தனியாக வா. பேசலாம்' என்று அழைத்து சென்றாராம்.

அங்கே சென்றவர், உனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவது என் பொறுப்பு. ஆனால், அதற்கு சில தியாகங்களை செய்ய வேண்டும் என்று சொல்லியபடியே அத்துமீறி நடக்க ஆரம்பிக்க, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ரசிகா. ஆனாலும், நான்கு சுவர்களுக்குள் எதிர்ப்புகள் பலமிழந்து போக, நிலை மறந்து போனாராம் நிர்வாகி. அதன்பின் இவரது தோழர்களுக்கும் விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. எல்லாம் முடிந்து வெறுப்போடு கிளம்பும்போது, நிர்வாகியின் செல்போனை நைசாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார் ரசிகா.

அந்த செல்போனில் இருந்த நம்பர்களுக்கெல்லாம் போன் செய்து, விஷயத்தை குமுறியபடியே சொல்ல, அதை கேட்ட முக்கியஸ்தர் ஒருவர், நடிகரிடம் நடந்த விஷயத்தை அப்படியே கூறினாராம். அதன்பின் விறுவிறுப்பாக செயல்பட்ட நடிகர், எந்த நேரத்தில் ரசிகா வந்தார்? அவரிடம் யார் யாரெல்லாம் பேசினார்கள் என்ற தகவலை அலுவலகத்தில் விசாரித்து தெரிந்து கொண்டாராம். பின்பு ரசிகாவிடமே பேசி ஆறுதல் சொன்னாராம். நிர்வாகியையும், அவருடன் இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களையும் நேரில் அழைத்து தர்ம அடி கொடுத்தவர், உடனடியாக அவர்களை மன்றத்திலிருந்தே நீக்கினாராம்.

பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் மட்டுமா? வேலி தாண்டியவர்களுக்கு விலகல் மட்டுமா? சம்பந்தப்பட்டவர்களே பதில் சொல்லட்டும்....

-நடுநீதி நாயகன்

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter