First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழர் மாநாட்டிற்காக லண்டன் செல்லவிருந்த வைகோவிற்கு விசா மறுப்பு - பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டு சேரவாய்ப்பு - 100 நாட்களில் தீவிரவாதிகளை அடக்க சிறப்பு தனிப்படை: மன்மோகன்சிங் - தமிழக காவல்துறையை கண்டித்து சென்னையில் அதிமுக மாபெரும் போராட்டம் - கருணாநிதிக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது
பந்தயத்தில் சுராங்கனி
பரவசத்தில் விஜய் ஆன்ட்டனி

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நிதின் சத்யா ஹீரோவாக நடிக்கிற படம் பந்தயம். Panthayamஇப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அமர்க்களமில்லாமல் எளிமையாகவே நடந்தது. முன்னதாக மூன்று பாடல்களை திரையிட்டார்கள். சிலோன் மனோகர் பாடிய 'பப்பிசை' பாடலான சுராங்கனி பாடலின் ரீமிக்சும் திரையிடப்பட்டது. விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, இப்படத்தின் இசைமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி, சுராங்கனி பாடலை ரீமிக்ஸ் செய்தால் நன்றாக இருக்கும். அந்த பாடலின் உரிமையை பெற்றுத்தர முடியுமா? என்றார். அப்பாடலை இசையமைத்து பாடிய சிலோன் மனோகர் என் நண்பர். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் ஒரு வில்லனாக அவரை நடிக்க வைத்திருந்தேன். அந்த உரிமையில் நான் அழைத்ததும் என் வீட்டுக்கே வந்தார். இந்த பாடல் வேண்டும் என்றேன். உடனே கொடுத்துவிட்டார்.

அதே மாதிரி இந்த படத்தின் விற்பனையும் தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத S.A.Chandrasekarஆச்சர்யம். சுமார் பதினைந்தே நிமிடத்தில் பேச்சு வார்த்தை முடிந்தது. என்னை தேடி வந்திருந்த நேமிசந்த் ஜபக்கிடம், நிதின் சத்யா இப்படத்தில் விஜய் ரசிகராக நடிக்கிறார் என்றும், விஜய் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றையும் சொன்னேன். உடனே எல்லா ஏரியாவையும் அவரே வாங்கிக் கொண்டார் என்றார் எஸ்.ஏ.சி.

நிதின் என்னோட தோஸ்த். இந்த படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நடிகர் பரத். அட்மாஸ்பியருக்காக வந்தாரோ என்னவோ? இரண்டே வார்த்தைகளில் வாழ்த்திவிட்டு அமர்ந்தார் நடிகை சந்தியா.

-ஆர்.எஸ்.

hotnews
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter