|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ரசிகர்மன்ற தலைவர் நீக்கம்
கமல்ஹாசன் அதிரடி முடிவு

தனது ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றியதோடு அல்லாமல், KamalHasanஒவ்வொரு வருடமும், ஏராளமான நலத்திட்டங்கள் செய்து வருகிறார் நடிகர் கமல். இந்த நற்பணி மன்றத்தின் தலைவராக ர.குணசீலன் என்பவர் பணியாற்றி வந்தார்.

பொதுவாக ரசிகர் மன்ற தலைவராக இருப்பவர்கள் எந்த நேரத்திலும் ஹீரோவை சந்திக்கலாம். அவரோடு மன்றம் குறித்து விவாதிக்கலாம் என்ற சௌகர்யங்கள் இருக்கிறது. கமல்ஹாசன் மன்றத்தில் இன்னொரு சௌகர்யமும் உண்டு. பத்திரிகைகளில் வெளிவரும் 'இதய நோய்க்கு உதவி செய்யுங்கள்' போன்ற விளம்பரங்களை பார்த்து, சம்பந்தப்பட்ட நோயாளியை அணுகி பண உதவி செய்வது வரை தலைவரின் கன்ட்ரோல்தான். தனது சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை இதுபோன்ற உதவிகளுக்காகவும் ஒதுக்கி வருகிறார் கமல். இதில் ஏதாவது முறைகேடுகள் நடந்ததா? அல்லது வேறு விவகாரங்களா தெரியவில்லை.

13-8-08 முதல் தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க தலைவராக இருந்த ர.குணசீலன், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் டி.ஜான், மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.ராஜூ ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிரடி முடிவை அறிவித்திருக்கும் கமல், அதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. எனினும் இன்னும் சில நாட்களில் உண்மை அம்பலத்திற்கு வரக்கூடும். விரைவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்களாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter