First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜெய்பூரில் 7 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு: 60 பேர் பலி. 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - ஜெய்பூர் சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு: நாடு முழுவதும் உஷார் - சிலைகளை சேதப்படுத்தினால் குண்டர் சட்டம் பாயும்: தமிழக அரசு எச்சரிக்கை - இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு: அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
பப்பர மிட்டாய்...
-தனுஷ் வெளியிட்ட குழந்தைகள் சி.டி

படப்பிடிப்பில் தனுஷை பார்ப்பவர்கள் கொஞ்சம் அதிர்ந்துதான் போவார்கள். Papparamittaiகுழந்தையை போலவே குதூகலமாக இருப்பார் அவர். தொழிலாளர்களிடமும், சக நடிகர்களுடனும் ஒரு குழந்தையை போலவே விளையாடிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவர் குழந்தைகளுக்கான ஆடியோ சி.டி யை வெளியிடுவது எவ்வளவு பொறுத்தமானது? வாணி மஹாலில் நடைபெற்ற விழா ஒன்றில் பப்பர மிட்டாய் என்ற குழந்தைகளுக்கான கதைகள் அடங்கிய ஆடியோ சி.டி யை வெளியிட்டார் தனுஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பெற்றுக் கொண்டார். “இப்போதெல்லாம் நமது குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா, பாட்டிகளுக்கே நேரம் இல்லை. நாமும் அதோ ஸ்டார் பாரு, மூன் பாரு என்று சொல்வதோடு சரி. அதற்கு மேல் சொல்ல நேரமும் இல்லை. யோசிக்கவும் முடியவில்லை. ஆனால் இந்த பப்பரமிட்டாய் சி.டி அந்த குறைகளை போக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இது பெரிய கொடுப்பினைதான். நான் கூட இந்த சி.டி யை வாங்கிக் கொண்டுபோய் என் குழந்தையிடம் போட்டு கேட்க செய்வேன்” என்றார் தனுஷ் மகிழ்ச்சியோடு. களஞ்சியம் நிறுவனம் சார்பாக இந்த சி.டி களை தயாரித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைவர் முனுசாமி ரவிராஜ்.
இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் போன் செய்தால் போதும். இலவசமாக இந்த சி.டி யை வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள் இந்த களஞ்சியம் நிறுவனத்தினர். போன் நம்பர் வேண்டுமா? 044-24304241, 24455568
முகவரி- 11, அவதார் அபார்ட்மென்ட், 27. பாலகிருஷ்ணா ரோடு, வால்மீகி நகர், திருவான்மியூர். சென்னை 600 041

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த சி.டி யில் வருகிற கதைகளை குழந்தைகளே சொல்லியிருப்பதுதான்.

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter