| நடித்தால் ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று சிம்ரன் அடம் பிடிப்பதாக வந்த செய்திகளை அப்படியே அழித்துவிடுங்கள். ஹரி இயக்கும் சேவல் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன். ஹீரோயின்களை வெறும் ஆட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் அவர்களுக்கும் படத்தில் முக்கிய ரோல் கொடுப்பது ஹரியின் வழக்கம். சேவல் படத்திலும் அதே ஸ்டைலைதான் பின்பற்றியிருக்கிறார் ஹரி. ஆனால் சிம்ரன் ஹீரோயின் அல்லவாம். தாமிரபரணி படத்தில் நதியாவுக்கு எப்படி முக்கிய வேடம் அமைந்ததோ, அதுபோலதான் இந்த படத்தில் சிம்ரனுக்கும். ஹீரோயினாகதான் நடிப்பேன் என்று அவர் சொன்னதாக கேள்வியுற்ற ஹரி சற்று தயங்கி தயங்கிதான் சிம்ரனிடம் கதை சொன்னாராம். அதை கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டாராம் சிம்ரன். குசேலன் படத்தில் சிம்ரன் நடிக்காமல் போனது சம்பள பிரச்சனையால்தான் என்று பி.வாசுவே சொன்ன பிறகு இவர்கள் சம்பளத்தை குறைத்து பேசுவார்களா என்ன? சிம்ரன் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க சம்மதித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஜின்னா.
-ஆர்.எஸ்.அந்தணன் |