First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஊழல் புகாருக்கு சிபாரிசு செய்த தமிழக அமைச்சர் பூங்கோதை ராஜினாமா - ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு - ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் யாழ்பாணத்தில் சுட்டுக்கொலை - சீனா பூகம்பத்தில் சுமார் 15000 பேர் பலி
80 இடங்களில் ஆடியோ வெளியீட்டு விழா
-விஜயகாந்த் படத்தின் சாதனை

அரசியல் கட்சி துவங்கி ஆட்சியை பிடிப்பாரோ, இல்லையோ. ஆடியோ உலகில் Arasangamஒரு பெரிய மாற்றத்தையே நிகழ்த்தியிருக்கிறார் விஜயகாந்த். தமிழ்சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இப்படியரு விஷயம் நடந்ததில்லை. வருகிற 28-ந் தேதி அரசாங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை தவிர, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட துணை நகரங்களிலும் நடக்கவிருக்கிறது. 80 இடங்களில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருக்கும் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகள் இதற்காக 1 லட்சம் சி.டி க்களுக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அரசியல் கட்சி துவங்கிய நடிகர்களின் வரிசையில் விஜயகாந்த் புதியவரல்ல. ஆனாலும், அரசியலால் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறார் என்றே இந்த விஷயம் குறித்து வியக்கிறார்கள் திரையுலகத்தினர். வெறும் ஆடியோ வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் சேர்த்து வழங்கவிருக்கிறார்களாம் விஜயகாந்த் கட்சியின் தொண்டர்கள். இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும் திருவண்ணாமலை பகுதி கட்சிக்காரர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவோடு இலவச திருமணங்களையும் செய்து வைக்கிறார்களாம். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு எடுத்த எடுப்பிலேயே ஒரு லட்சம் சி.டிக்கள் விற்பனையாவதும் இதுவே முதல் முறை. படத்திற்கு இசை ஸ்ரீகாந்த் தேவா! பாடல்களை வெளியிடும் உரிமையை ரிதம் மியூசிக் பெற்றிருக்கிறது. முதல் முறையாக அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்தும் 350 சிடி களுக்கு ஆர்டர் வந்துள்ளதாம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter