First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
காங்கிரஸிற்கு 266 எம்பிக்கள் ஆதரவு: அஜீத்சிங், தேவகவுடா மயாவதிக்கு ஆதரவு - சார்க் மாநாட்டில் கட்சச்தீவை இந்தியா மீட்கக்கோரி கருணாநிதி வேண்டுகோள் - 15ந்தேதி நடிகர் சிரஞ்சீவி புதுக்கட்சி துவக்குகிறார் - திமுகவுக்கு கட்டுப்பட்டுள்ளதாக தயாநிதிமாறன் எம்பி பேட்டி
இருபது ஆண்டுகளுக்கு பிறகு மு.க.முத்து
-மாட்டுத்தாவணி படத்திற்காக பாடினார்

நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா..., சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப M.K.Muthuபேருங்க... இந்த பாடல்களில் ஒலித்த அந்த கணீர் குரலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன் ஆகிய படங்களின் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன் பாடியும், நடித்தும் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட மு.க.முத்து தற்போது மீண்டும் பாடியிருக்கிறார். பவித்ரன் இயக்கும் மாட்டுத்தாவணி படத்தில் அண்ணன்மாரே, தம்பிமாரே என்ற பாடலை பாடினார் மு.க.முத்து. சில வருடங்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் மீண்டும் நலமடைந்து பழைய உத்வேகத்தோடு திரைப்படங்களில் பணியாற்ற முடிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த், நமீதா நடிக்கும் இந்திரவிழா படத்தில் அப்பா கேரக்டருக்காக நடிக்க அழைத்திருக்கிறாராம் அப்படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர். இன்னும் சில வாய்ப்புகளும் அவரை தேடி வந்திருக்கின்றன.

தேவா ரெக்கார்டிங் தியேட்டரில் மாட்டுத்தாவணி படத்திற்காக பாடிய மு.க.முத்து, முன்னதாக தனது வளர்ப்பு தாயும், முரசொலி மாறனின் தாயுமான சண்முகத்தம்மாளிடம் ஆசி பெற்றார்.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
.
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter