| யார் கொளுத்தி போட்ட வதந்தியோ, சினேகா படம் எடுக்க போகிறார் என்று கோடம் பாக்கத்தில் செய்தி உலவியது. அவர் தயாரிக்க போகும் இந்த படம் குழந்தைகள் சப்ஜெக்ட் என்றெல்லாம் கொளுத்தி போட்டிருந்தார்கள். இந்த செய்தியை படித்த சினேகாவின் தோழிகள் அவருக்கு விஷயத்தை சொல்ல, அதிர்ச்சியடைந்தாராம் அவர். சம்பாதித்த பணத்தை கட்டிடங்களாக முதலீடு செய்து வரும் அவர், ஒருபோதும் சினிமா தயாரிக்க வேண்டும் என்று விரும்பியதே இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பண்ருட்டியில் திருமண மண்டபம் கட்டியிருக்கும் அவர், வாய்ப்பு கிடைத்தால் மேலும் சில மண்டபங்களை கட்டுவாரே தவிர, படம் எடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ள மாட்டார் என்கிறார்கள் அவரது தோழிகள்.
|