First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா? பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை - தங்கக்காசு மோசடி திட்டம்: கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தின் மீது ஆயிரக்கணக்கானோர் தமிழக போலீசாரிடம் புகார் - பாரத மாதா நிர்வாணப்படம் வரைந்தது தொடர்பாக ஓவியர் உசேன் மீது தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி - மியான்மரில் புயலுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சம் ஆனது: 5,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி இன்னும் தண்ணீரில் மிதக்கிறது - முன்னாள் அமைச்சர் தா.கிருட்டினன் கொலை வழக்கில் அழகிரி உட்பட 13 பேரும் விடுதலை சித்தூர் நீதிமன்றம் தீர்ப்பு
நயன்தாராவுக்கு முதல் மரியாதை
-கோபப்படும் சேட்டன், சேச்சிகள்

சேட்டன்கள் மட்டுமல்ல, சேச்சிகளும் கூட பொசுங்கி கிடக்கிறார்கள். Nayantharaவேறொன்றுமில்லை. மலையாள சினிமாக்களில் ஆரம்பகட்ட ஹீரோயினாக இருந்தபோது ஒருவரும் மதிக்க மாட்டார்களாம் நயன்தாராவை. ஆனால், இப்போது விஷயமே வேறு. எந்த பத்திரிகையை புரட்டினாலும், நயன்தாரா புராணம்தான். அவர் போகிற இடத்தில் எல்லாம் லைவ் ரிலே செய்யாத குறையாக சேனல்களும் அக்கறை காட்டி வருகின்றன. அந்தளவுக்கு இளசுகளின் மனசை இம்சிக்க ஆரம்பித்துவிட்டார் நயன். சமீபத்தில் மலையாள படவுலகத்திற்கு நிதி சேர்ப்பதற்காக எடுத்து வரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட திருவனந்தபுரம் வந்த நயனுக்கு விமான டிக்கெட் என்ன? ஸ்டார் ஹோட்டல் என்ன? பென்ஸ் கார் சவாரி என்ன? யானையை வைத்து மாலை போடாத குறைதான். அந்தளவுக்கு வரவேற்பு. இதை கவனித்த மற்ற சேச்சிகளுக்குதான் நயன் மேல் அத்தனை பொறாமையாம். பொறாமை கோபமாக மாறி தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் பக்கம் திரும்பியிருப்பதுதான் அதில் வேடிக்கை. சும்மா கிடந்த நயனுக்கு ராஜ உபச்சாரம் செய்தது தமிழ்நாட்டு ஆளுங்கதான். அதை பார்த்துட்டுதான் இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்க. இதை அடக்கி வைக்கணும் என்று முணுமுணுக்கிறார்களாம்.

யானைக்கு கரும்பு கட்டு கொடுக்கிற ஊர்ல, முயல்குட்டிக்கு வெண்ணெய் கொடுத்தா கோபப்படுறாங்களே, நியாயமா?

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter