| ரீமிக்ஸ் பாடல் என்ற கட்டாயத்திற்கு இயக்குனர் பாலாவும் பலியாகிவிட்டார். நான் கடவுள் படத்தில் மாதா உன் கோவிலில் என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். பிதாமகன் படத்தில் பல பழைய பாடல்களை கதம்பம் ஆக்கி கொடுத்திருந்த பாலா, அப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் போலும். எழுத்தாளர் ஜெயமோகன் எம்.ஜி.ஆர்-சிவாஜி கட்டுரை பிரச்சனையில் சிக்கிக் கொண்டதும், படப்பிடிப்புக்கு அவரை நேரில் அழைத்த பாலா, “கவலைப்படாதீங்க... எல்லாம் சரியாயிடும்” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாராம். தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏராளமான குள்ளர்கள், வயசாளிகள், என்று அப்பகுதியில் குவித்து வைத்திருக்கிறார் பாலா, இவர்களுடன் ஒரு அழகான அரவாணியையும் நடிக்க வைத்திருக்கிறாராம். பார்த்தால் அவர் அரவாணி போலவே தெரியாது. குரலை வைத்துதான் கண்டு பிடிக்க முடியுமாம்.
-ஆர்.எஸ். |