| விஜயா? விக்ரமா? தங்கள் ஹீரோக்களை தலைமேல் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் சண்டை போடலாம். ஆனால், இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையே நிகழும் இந்த வியாபார சண்டையில் உண்மை, ஒளிந்து கொள்ள இடம் இல்லாமல் தவிப்பதுதான் வேடிக்கை. தமிழ் திரையுலகில் எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு குருவி படத்தின் கேரளா ஏரியாவின் விநியோக உரிமை ஒன்றரை கோடிக்கு விலை போயிருக்கிறது. இதற்கு முன் விஜய் நடித்த எந்த படத்தையும் இத்தனை ரூபாய் விலை கொடுத்து யாரும் வாங்கியதில்லையாம். இதை சாதனையாக வெளிப்படுத்திக் கொண்ட குருவி டீம், அடுத்த வாரத்திலேயே வேறொரு செய்தியை கேட்டு உண்மையா? பொய்யா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் நடித்த கந்தசாமி படத்தின் கேரள ரைட்ஸ் இரண்டு கோடிக்கு விற்பனை ஆகியிருப்பதாக வந்த செய்திதான் அது. ஆனால் மேற்படி செய்தி யாரோ கிளப்பி விட்டதுதான். அந்தளவுக்கு விலை போகவில்லை என்று கேரள விநியோகஸ்தர் சங்கத்தில் இருந்தே தகவல் வர, மீண்டும் தெம்பாக இருக்கிறது குருவி டீம்.
|